October 03, 2018

இந்த சடலத்தை, அடையாளம் காண உதவுங்கள்

-JM.Hafeez-

கண்டி வைத்திய சாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவருடையது என சந்தேகிக்கும் இனம் தெரியாத சடலத்தை இனம் காட்ட உதவுமாறு பொலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி கண்டி வைத்திய சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதப்பட்ட நிலையில் மேற்படி நபர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிட்சை பயனின்றி அவர் மரணித்துள்ளார். இவர் யார் என்பது பற்றி விபரங்கள் ஏதும் இல்லாத நிலையில் அடையாளம் காண சிரமமாக இருப்பதாகவும் பெரும் பாலும் தமிழ் மொழி பேசும் ஒருவராக இருக்கலாம் என சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து பொலீசார் சந்தேகிக்கின்றனர்.  

மேற்படி சடலம் கண்டி வைத்திய சாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை இனம் காட்ட பொதுமக்கள் உதவும் படியும் கண்டி பொலீஸ் நிலைய விபத்துககள் பிரிவின் பொலீஸ் காண்ஸ்;டபிள் பண்டார (33840) தெரிவித்தார். 

0 கருத்துரைகள்:

Post a Comment