Header Ads



தயவுசெய்து பிள்ளைகளை ஏசாதீர்கள்...!


5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளை  விமர்சிக்க  முன்னர் நீங்கள் அறியவேண்டிய  அடிப்படை உண்மைகள்.

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் Pass marks (சித்தி பெறும் புள்ளி)  என்பது வேறு  Cut off marks (வெட்டுப்புள்ளி) என்பது வேறு.

Pass marks- (சித்தி பெறும் புள்ளி)- ஒவ்வொரு  வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல் அல்லது மொத்தமாக 70  புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் pass marks பெற்று சித்தியடைந்தவராவார்.

Cut off marks (வெட்டுப்புள்ளி )- அரசாங்கத்தினால் வழங்கப்படும்  உதவித்தொகையை  பெற தெரிவு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையில்  இறுதி  மாணவர் பெறும் புள்ளியாகும்.

இது பற்றி தெளிவாக  கல்வி அமைச்சின்   இணைய தளத்தில்  காணலாம்.


இங்கு விடயம் என்னவென்றால்  வெட்டுப்புள்ளியைத்தான்  Pass marks என கருதி  நாம் எமது இளம் சந்ததியினரை   விமர்சிக்கின்றோம்.

வெட்டுப்புள்ளியினை  பெற்று புலமைப்பரிசில் பெற தகுதியான  மாணவர்களை  பாராட்டுவதில்  தவறில்லை. மாறாக  வெட்டுப்புள்ளிக்கும் Pass marks க்கும் இடைப்பட்ட  புள்ளிகளை பெற்ற சிறந்த  மாணவர்கள் பரீட்சையில் தோல்வி  அடைந்தவர்களாக அடையாளம் காட்டப்படுவதுதான்   மிகவும் தவறான  விடயமாகும்.

இம்மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று உதவித் தொகை  பெற மட்டுமே  தகுதி  பெறவில்லை .

எனவே இவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுக்காக  இவர்களை பாராட்டப்போகின்றோமா?  அல்லது புலமைப்பரிசில் பணத்தை பெற தகுதி பெறவில்லை என்ற ஒரே  காரணத்துக்காக  அவர்களை விமர்சிக்கப்போகின்றோமா?

கடந்த கால O/L  A/L பெறுபேறுகளை ஒப்பீடு  செய்யும் போது 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற வெட்டுப்புள்ளி என்பது குறிப்பிட்டளவு  செல்வாக்கு    செலுத்தவில்லை என்பதை  அறிய  முடியும்.

எனவே வெட்டுப்புள்ளிக்கு குறைவாக  பெற்றாலும்  pass marks இனை  பெற்ற மாணவர்களையும்  பாராட்டுவோம்.  அவர்களை  மேலும் உச்சகமூட்டி எதிர்கால வாழ்க்கையின்  துறையினை தீர்மானிக்கும்  பிரதான பரீட்சைகளில்  (O/L,A/L) சிறந்த பெறுபேறுகளைப்பெற  அவர்களை தயார்படுத்துவோம்.

Abu Yusuf

No comments

Powered by Blogger.