Header Ads



பாராளுமன்றத்தில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, நான் பேசியதற்காக என்னை பழிவாங்க முயற்சி

பொலிஸ் மா அதிபர் என்னை பழிவாங்குவதற்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கையாக இதனை கருதுகின்றேன் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு புணானை ஜெயந்தியாயவிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பல கட்டட ஒப்பந்தகாரர்கள் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் அதிகமான கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டார்.

எனினும், வேலைகள் திருப்தி இல்லாத காரணத்தினால், வேலைகளை துரிதப்படுத்துமாறு எமது நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டனர்.

அதிகமான பணத்தினை பெற்றுக் கொண்ட நிலையில் எமது நிறுவனத்தில் இருந்து வேலை செய்வதை தாமாகவே அவர் விலகிக் கொண்டார்.

அத்தோடு வேலைகளுக்கு தேவையான சில உபகரணங்கள் மற்றும் மூன்று வாகனங்களை விட்டு சென்று பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஊடாக மூன்று வாகனங்களையும் பெற்றுச் சென்றார்.

ஆனால் வேலை செய்யும் உபகரணங்களை தருமாறு எங்களிடத்தில் கேட்கவுமில்லை, எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவில்லை.

இவர் எங்களது நிறுவனத்திடம் இருந்து மேலதிகமாக 350 மில்லியன் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கொழும்பு வர்த்தக கொமர்ஷல் மேல் நீதிமன்றில் வழங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

திடீரென ஒப்பந்தகாரர் பொலிஸ் மா அதிபரை அணுகி வேலை செய்யும் உபகரணங்களை பலாத்காரமாக தடுத்து வைத்திருக்கின்றோம் என்று முறைப்பாட்டை செய்து இருந்தார்.

இந்த முறைப்பாட்டை உடனடியாக பொலிஸ் மா அதிபார் புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பி இவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் எங்களுக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளனர். இது தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் நடாத்தவில்லை.

இதனையடுத்து, எமது நிறுவனத்தின் தலைவர் உட்பட உயர் பதவியில் உள்ளவர்களின் பெயரை பொய்யான குற்றச்சாட்டில் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புலனாய்வு பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

150 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கடத்தியதாக ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையிலே ஒரு அப்பட்டமான பொய். அவரே அவருடைய பொருட்களை எங்களிடத்தில் கைவிட்டு விட்டு சென்றுள்ளார்.

இதனை அவர் எங்களிடத்தில் கேட்கவில்லை. புலனாய்வு பிரிவினர் வந்து கேட்டார்கள். அவர் வந்து எடுத்துச் செல்லலாம் என்று நாங்கள் கூறினோம். இதனை பாவிக்க முடியாத பொருட்கள் என்று புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

உண்மையில் நான் பொலிஸ் மா அதிபரை குற்றம் சாட்டுகின்றேன். ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் அவருக்கெதிரான பேசியதற்காக என்னை பழிவாங்குவதற்கு எடுத்த ஒரு முயற்சி நான் இதனை பார்க்கின்றேன்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினேன்.

இதற்கு பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் கூறினேன். என்னை பழிவாங்க இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டை செய்துள்ளார்.

எதிர்வரும் வரும் நாடாளுமன்ற அமர்வில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை நாடாளுமன்ற விசேட சிறப்புரிமை ஒன்றை எழுப்பி இது தொடர்பில் பேச இருக்கின்றேன்.

குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு என்னையும், எனது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முகாமையாளருமான எம்.தாஹீர், திட்ட பொறுப்பாளர் அபுல்ஹசன் ஆகியோரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தினாலோ எங்களுக்கு எந்த அழைப்பும் விடுத்திருக்கவில்லை. எங்கள் நால்வரையும் கைது செய்வதற்கு புலனாய்வு பிரிவினர் முயற்சிப்பதாக தகவல் அறிந்து சட்டத்தரணிகள் மூலமான நீதிபதியிடம் சென்று எங்களை கைது செய்ய தேடுகின்றீர்களாக என்று கேட்டோம்.

உங்கள் நால்வரையும் நாங்கள் கைது செய்ய சொல்லவுமில்லை, நீதிமன்றத்திற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கவுமில்லை, ஆனால் நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சொன்னார்.

நாங்கள் சொன்னோம் எங்கள் நால்வரையும் கைது செய்வதற்கு புலனாய்வு பிரிவினர் முயற்சிக்கின்றார்கள். எங்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கேட்டோம். அதன் பின்னர் நீதிபதி எங்களை பிணையில் விடுதலை செய்தார்.

குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரிடத்தில் கூட பிழையான முறையில் இப்பல்கலைக்கழகம் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகம் என முறையிட்டப்பட்டுள்ளது. இதுவே ஒரு அப்பட்டமான பொய். இந்த விடயத்தினை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் எங்களிடத்தில் விசாரித்திருக்க வேண்டும் என்றார்.



இந்த ஊடக சந்திப்பில் வாகரை பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு பல்கலைக்கழக முகாமையாளருமான எம்.தாஹீர் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.