கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Puttalam Human Development , Clean Puttalam அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் இயங்கும் ஏனைய தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் இந்த குப்பைத் திட்டத்திற்கு எதிராக சுழற்சி முறையில் இரவு, பகலாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் புத்தளத்தில் வாழும் மூவின மக்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் , பள்ளிவாசல்கள் நிர்வாகளும் சுழற்சி முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ள அ.இ.ம.கா தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக மக்கள் காங்கிரஸ் சார்பில் முக்கிய அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த திட்டத்திற்கு எதிராக அமைச்சர் ரிஷாதும், அ.இ.ம.கா பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மைக்காலமாக பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
R.Rasmin
R.Rasmin
0 கருத்துரைகள்:
Post a Comment