Header Ads



இது எப்படி அவுட் என்று கூறுங்கள்...? கோலியின் இணையத்தை முடக்கிய வங்காளதேச ஹேக்கர்கள்


ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாக கூறி விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேச ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். 

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.  

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.  

இருப்பினும் வங்காளதேச ரசிகர்கள் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டார், இதுவே தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புலம்பி வந்தனர். 

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். 

கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Liton Das was clearly not out
Conspiracy against Bangladesh
BCCI = ICC
REST IN PIECE CRICKET#INDvBAN#AsiaCupfinalpic.twitter.com/E9FAU9YOw6

— Vijay Salgaonkar (@connect2ns) September 28, 2018

கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த சி.எஸ்.ஐ சைபர் போர்ஸ் எனும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இத்தனைக்கும், ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. India fixed umpires and Umpires are always support india. Bd players were not allowed to bow boncers but Indian players bowled so many bouncers but not called wide. even one out off the bat of Karthik was not given even though snicko showed it is out. indian terrorism is spreading in every field.

    ReplyDelete
  2. Hackers என்றால் computer தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கள்ள வேலைகள் செய்பவர்கள். இப்படியான கள்ளர்களுக்கு கிறிக்கட் விதிகள் எப்படி புரியும்?

    ReplyDelete
  3. Sivasena in everywhere
    Bad salute for world cricket

    ReplyDelete
  4. Hello Ajan First of you see the match and decide who know nothing about Cricket. Indian mafia in every field. This is not the first time Umpire's decision went wrong not only this in this Match so many decision went wrong against BD. In 2015 world cup whole the world saw how these cheats(umpires) given out to Mahmadulla although fielder touch Boundary line.ICC(Indian cricket council) fix every thing.in 2016 Asia cup final last over's last two ball were wide but Thanks to ICC India won that match.In this match Karthik out caught behind the wicket on field umpire not given. BD review showed he snicked and it is out but That Rod Tucker said not out. All umpires are favoring India.In England too Kumar Darmasena not given out against Virath kholy although Hawk eye showed three red mean it is clean out. Umpires are specially against Muslim countries(Christian Terrorism)and they do not want Muslim countries winning. I can bring Thousand wrong decision against BD and Pakistan by ICC Indian cricket council umpires.


    Read here another news that Indian cheats stole 370 million rupees using bogus credit card.Thats what I say This India is epicenter of terrorism in every field.In politics.sports, economy and expert in terrorism and clever in behaving as saint.Match fixers are Indian and originated in India.

    ReplyDelete

Powered by Blogger.