October 12, 2018

வடக்கு முஸ்லிம் விவகாரத்தை, பேசு பொருளாக்குவோம்

வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு மணி நேர கால அவ­கா­சத்­திற்குள் உடுத்த உடை­யோடு முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு இந்த ஒக்டோபருடன் 28 வருடங்களாகின்றன. அந்தத் துய­ரத்தை மனதில் சுமந்­த­வர்­க­ளாக இன்று வரை இந்த மக்கள் நடைப்­பி­ணங்­க­ளாக, 'அக­திகள்' என்ற அவலப் பெய­ரு­ட­னேயே காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த மக்­களைத் துரத்­தி­ய­டித்த புலிகள் இன்று உயி­ருடன் இல்லை. அதற்குக் கார­ண­மான போரும் இல்லை. ஆனால் புலி­க­ளாலும் போரி­னாலும் துரத்­தி­ய­டிக்­கப்­பட்ட மக்கள் இன்றும்  சொல்­லொணாத் துய­ரங்­க­ளுடன் உயிர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்­கையில் இடம்­பெற்ற முப்­பது வருட கால யுத்தம் ஏற்­ப­டுத்­திய வடுக்கள் பல்­வேறு விதங்­க­ளி­லா­னவை. அவற்றில் சுமார் 50 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதற்­கப்பால் இலட்சக் கணக்­கானோர் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள். மேலும் பல இலட்­சக்­க­ணக்­கானோர் தமது வாழ்­வி­டங்­களை விட்டும் இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கி­றார்கள்.

இன்று போரின் இறுதிக் கட்­டத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி சர்­வ­தேசம் அதிக அக்­கறை கொண்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் இலங்கை விடயத்தில் காட்டமாகவிருக்கிறது. சர்­வ­தே­சத்தின் இந்த முன்­னெ­டுப்பு வர­வேற்­கத்­தக்­கது. இதன் மூலம் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­பதே எம் எல்­லோ­ரி­னதும் எதிர்­பார்ப்பு.

அதே­போன்­றுதான் போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் கடு­மை­யான பாதிப்­புக்­களைச் சந்­தித்த முஸ்லிம் மக்­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை சர்­வ­தே­சமும் உள்­நாட்டு அர­சியல் மற்றும் சிவில் சமூக சக்­தி­களும் வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இது ­பற்றிப் பேச வேண்­டிய குரல் கொடுக்க வேண்­டிய போராட்டம் நடத்த வேண்­டிய 21 முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் இது­ விடயத்தில் உண்­மை­யான அக்­க­றையை காட்­டு­வ­தாக இல்லை. அவர்கள் அகதி மக்­களை வைத்து அர­சியல் செய்­வதில் குறி­யாக இருக்­கி­றார்­களே தவிர அந்த மக்­களின் நலன்­களைப் பூர்த்தி செய்­வதில் துளி­ய­ளவும் அக்­க­றை­யற்­ற­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இது இன்று முஸ்லிம் சமூ­கத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக் கேடு என்­றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டில் மாற்றம் ஒன்று வேண்டும் என்­ப­தற்­காக முஸ்லிம் மக்கள் குறிப்­பாக வடக்கு கிழக்கு முஸ்­லிம்கள் நூற்­றுக்கு 99 வீதம் புதிய அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தார்கள். ஆனால் இந்த அர­சாங்­கமும் முஸ்­லிம்­களை கண்­டு­கொள்­ளாமல் காலத்தைக் கடத்­து­வ­தா­கவே தெரி­கி­றது. 

இந்த மக்கள் 28 வரு­டங்கள் குடிசைகளிலும் முகாம்களிலும் 'அகதி' என்ற அவல நாமத்­துடன் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அன்று வெளியே­றிய மக்­களில் கணி­ச­மானோர் இன்று வாழ்க்­கையின் இறுதிக் கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றார்கள்.

தமது வாழ் நாளில் எஞ்சியுள்ள காலத்தையாவது தமது தாயக பூமியில் கழிக்க வேண்டும்... அங்கேயே மரணிக்க வேண்டும்... அங்குதான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவாவை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதேபோன்றுதான் இவர்களது புதிய தலைமுறையாவது அகதி நாமம் களைந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

எனவேதான் இந்த மக்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது அரசியல்வாதிகள், சிவில் சமூகம், அரசாங்கம், சர்வதேச சமூகம், தொண்டு நிறுவனங்கள் என சகல தரப்பினரதும் கடமையாகும். இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு எதிர்வரும் வாரங்களில் வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூரும் தேசிய, பிராந்திய மட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பாராளுமன்றத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனம் இதன்பால் ஈர்க்கப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒன்றுபட்டு இந்தப் பணியைச் செய்ய முன்வர வேண்டும்.
-Vidivelli

5 கருத்துரைகள்:

After 28 years ..
It is not too late now ;
If you can get some compensation..supoose this happens to other communities ..
What do our politicians do ?
Most of them useless

After 28 years ..
It is not too late now ;
If you can get some compensation..supoose this happens to other communities ..
What do our politicians do ?
Most of them useless

I am very sorry Mr. Atteeq Abu; you said our politicians "Most of them are useless. Could you please point out at least of few useful politicians in our community.

எத்தனை விடிவெள்ளிகள் அல்ல நவமணிகள் அல்ல ஜம்மியதுல் உலமா அல்ல - யார்தான் எப்படித்தான் தொண்டை கிழிய கத்தினாலும் எங்கட அரசியல்ஞானிகளுக்கு ஒன்னும் விளங்காது பாருங்கோ. அவர்கள் எல்லாம் மாட்டுத்தோலை போர்த்திக்கொன்டு நித்திராதேவியை கட்டியணைத்து தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது கனவு, கற்பனை எல்லாம் எப்படி எதிர்வரும் தேர்தல்களில் மக்களை மாக்களாக்கி அவர்களது வாக்குகளை கபளீகரம் செய்து மீண்டும் பதவிக்கு வருவது என்பதிற்றான் இருக்கின்றது. மக்களே, தயவுசெய்து நீங்களும் அது இது என்று பார்க்காமல் இவர்களுக்கே வாக்களித்து பழைய சினிமா புதிய பதிப்பில் மீண்டும் வெள்ளித்திரையில் ஓட உதவி செய்யுங்கள்.

You want to point out some useful politicians .
Consider the people NFGG.
They are good people ..
Vote for them next time ..
Like engineer Abdul Rahman and cohorts ..
Try to make a difference ..
Do not vote for this old guys such as ...party politics people.

Post a Comment