Header Ads



எரிபொருள் விலைச்சூத்திரம், என்றால் இதுதான்...!


பிரதமர் உள்ளிட்ட அநேகமானவர்கள் அறியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

அந்த விலைச்சூத்திரமானது – MRP = V1 + V2+ V3+ V4 என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

MRP எனும் Maximum Retail Price நான்கு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

V1 என்றால் துறைமுகத்தில் இறக்கும் செலவு எனவும், ஒரு பீப்பாய்க்கு செலவாகும் சிங்கப்பூர் விலையும் ஆவியாதல் மற்றும் ரூபாவின் பெறுமதியும் இதன்போது கவனத்திற்கொள்ளப்படுகிறது.

V2 என்றால் உற்பத்தி செலவு (உள்நாட்டு துறைமுகக் கட்டணம், துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றபோது ஏற்படுகின்ற விரையம், சந்தை முகவரின் மானியம், களஞ்சிய செலவு ஆகியனவும் அடங்கும்)

V3 என்றால் நிர்வாக செலவு (ஊழியர் கொடுப்பனவு உள்ளிட்ட நிர்வாக செலவு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை உள்ளிட்ட ஏனைய செலவுகளும் உள்ளடங்கும்).

V4 என்றால் வரிச் செலவு (சுங்க வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய வரிகள் அடங்கும்)

மேற்சொன்ன நான்கையும் கணக்கிட்டே MRP-ஐ 10 ஆம் திகதிகளில் அறிமுகம் செய்வதாக அமைச்சர் மங்கள சமரவீர தௌிவூட்டினார்.

2 comments:

  1. where is the most important "V5 -Commission" ??

    ReplyDelete
  2. மக்களை முட்டாள் ஆக்க முடிவு செய்து விட்டால்... எப்படியும் செய்யலாம் என்பதற்கு மிக அண்மைய அத்தாட்சி, உண்மையில் விலை சூத்திரம் எதுவிமில்லாமல்தான் அன்மைய விலையேற்றங்கள்
    முதலாளிகளின் இஷ்டத்திற்கு இடம்பெற்றது என்பதற்கு இது ஒரு சான்று,

    இதில் ஆவியாதல் பெறுமதி எதைக்கொன்டு அளவிடப்படுகிறது என்பது அமைச்சருக்கும் தெரியாதாம், ஆக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் கணக்கிடப்பட்டு (வி1, வி2,வி3, வி4) விலையேற்றம் நடக்கும்...
    லீற்றர் ஒன்றுக்கு அரசாங்கம் 60 முதல் 65 வரை வரி விதிக்கின்றது..
    இதில் வரும் பணம்,
    விவசாய அமைச்சின் (நடிகை சபீதாவிற்கு சொந்தமான) கட்டிவாடகை இதுவரை 350 கோடி, மற்ற மற்ற அமைச்சுகளின் சுக போக கட்டிட வாடகை மாதம் 102 கோடி, அப்டி இப்டி பார்த்தால் நம் பைக்கட்டில் கை விட்டு எடுக்கும் பணம் எல்லாம் அவர்களது சுக போகத்திற்கே..

    இதையும் சேருங்க.. நடிகையும் கொழும்பு மேயரும் (ரனில் அவர்களின்...) ஆன ரோசியின் வீட்டு கார்டன் அலங்கரிப்புக்கு 8.5 மில்லிய்யன்..
    வாழ்றாங்க மக்களே..

    ReplyDelete

Powered by Blogger.