Header Ads



முஸ்லிம் அதிகாரிகளை இடமாற்றி, கிழக்கு ஆளுநர் அடாவடி - முஸ்லிம் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் முக்கிய பதவிகளிலிருந்து முஸ்லிம்களை அகற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகம எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்த எம்.ரி.எம். நிஸாம் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்த முஹம்மத் சலீம் ஆகியோர் அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளனர்
ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, .எச்.எம். பௌஸி, எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, அசாத் சாலி ஆகியோர் தமது பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த நிஸாம் இடமாற்றப்பட்டு அவரது இடத்துக்கு தமிழர் ஒருவர் முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம் அமைச்சர்களது ஆட்சேபனையை அடுத்து கடைசி நேரத்தில் தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக மன்சூர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
41 சதவீத முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் திணைக்களங்களில் தலைவர்களாக ஓரிரு முஸ்லிம்களே இருக்கிறார்கள்.
ஆளுநரிடம் இந்த மாற்றங்கள் பற்றி கேட்டால், ஜனாதிபதியின் பணிப்புரைப்படியே செய்வதாக தெரிவிப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக இந்த மாற்றங்களைச் செய்வதாக ஆளுநர் முஸ்லிம் அமைச்சர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்
கல்விப் பணிப்பாளராக இருந்த நிஸாம், கிழக்கு கல்வி அமைச்சரின் சிரேஷ்ட உதவி செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த எஸ்.எப்.எம். சலீம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளார்

பிந்திக் கிடைத்த தகவலின் படி இந்த மாற்றங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் பேசியும் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது.
(இன்றைய (03) நவமணி பத்திரிகையின் தலைப்புச் செய்தி)

6 comments:

  1. Tamils in north allows a muslim man to be a district sectretriat in Vavuniya where 83% are tamils. But in East, muslims are protesting against tamil appointments. It shows the tolereance of eastern muslims

    ReplyDelete
  2. தமிழ் அதிகாரிகள் வேண்டாமென்று முஸ்லிம்களும் முஸ்லிம் அதிகாரிகள் வேண்டாமென்று தமிழர்களும் போராடுவது கிழக்கு மாகாணத்தில் தினசரி நடவடிக்கையாக மாறிவிட்டது. தமிழரும் முஸ்லிம்களும் தனித் தனி அலகுகளுக்குளாக உடைதல் கிழக்கில் துரிதப்பட்டு வருகிறது. இந்த அலகுகாளாகப் பிழவுபடுதல் இப்ப கல்முனையில் வேகமடைந்துள்ளது.

    ReplyDelete
  3. Neenkal pesum karuththukkalai vaiththuthaan vendaam enkiraarhal, unkal manathai thottu sollunkal neenkal yaal Muslim news varum pothu unkaludaya comments eppadi koduthaneenka endu enkalukku theriume athuthaan makkal ippadi pesa karanam ethavathu malls karuththu solli irukkureenkala,Anusath

    ReplyDelete
  4. இந்த statistic பிழையானது. கிழக்கின் முஸ்லிம் சனத்தொகை 31%

    ReplyDelete
  5. உண்மை ஐயா, இது போன்ற செய்திகளை பிரசுரித்து உள்ளங்களை பிரித்து வியாபாரம் செய்யும் ஊடகங்கள் தான் பெரும் குற்றவாளிகள்.

    ReplyDelete
  6. வன்முறைகளையும் தமிழர்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து இலங்கை அரசாங்கம் இந்திய அரசின் பின்னூட்டலின் விளைவாக மாகாண ஆட்சிமுறை ஒன்றினை 28 April 1988ல் அறிமுப்படுத்தியது. இதன் அடிப்படையில் இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 19 November 1988 ல் நடைபெற்று தமிழர்களினைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஆட்சி அமைத்தது. ஆப்போதைய வட கிழக்கில் முஸ்லிம்களது விகிதாசாரம் அண்ணளவாக 17% ஆக இருந்தது. ஆயினும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணத்தால் 1 March 1990 திகதியன்று வட கிழக்கு மகாணசபையின் ஆட்சி முடிவுறுத்தப்பட்டு ஜனாதிபதியின் ஆட்சி அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. புpன்னர் இந்நிகழ்வு 10 May 2008 திகதி கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்படும் வரை தொடர்ந்திருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் வட கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அலுவல்கள் பெரும்பாலும் தமிழ் அரச அதிகாரிகளினாலேயே நடாத்தப்பட்டது. ஆங்காங்கே ஒரு சில சிங்கள உயர் அதிகாரிகள் காணப்பட்டனர். கல்வி அமைச்சின் செயலாளராக அண்ணளவாக இரண்டு வருடங்கள் முஸ்லீம் ஒருவரும் மாகாணக்கல்விப் பணிப்பாளராக ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமாக ஒரு முஸ்லீமும் கடமையாற்றியுள்ளனர். வட கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 36 உயர் அதிகாரிகளுக்கான பதவியணிகள் இருந்தும்கூட முஸ்லீம் உயர் அதிகாரிகள் மாகாண நிர்வாகத்தில் (இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன் வைக்கப்பட்டபோதிலும்) அது செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தத்தைப்போல் பெரிதாக ஒலித்து பின் மங்கி மறைந்தும் விட்டது. கிழக்கு மாகாணசபையின் தோற்றத்தின் பின்னரே ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
    விடயம் அதுவல்ல. அரச சேவையிலுள்ள ஒருவர் இடமாற்றம் செய்யப்படும்போது அரச சுற்றறிக்கைகள் மற்றும் விதிமுறைகள் நிச்சயமாகப் பின்பற்றப்படவேண்டும். காலையில் விழித்ததும் இடமாற்றக் கடிதத்தைக் கொடுத்து வெளியே போ என்று சொல்வது நாகரிகம் அல்ல. அதிகாரிகளுக்குக்கூட சங்கடங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் உண்டு. அதிகாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பரஸ்பர இசைவாக்கம் புரிந்துணர்வு இருத்தல் வேண்டும். இடமாற்றம் ஒன்று நடக்குமானால் அதற்கும் சரியான Justification இருத்தல் வேண்டும். ஆளுனர்கூட மக்கள் வரிப்பணத்திலிருந்தே தமக்குரிய வசதி வாய்ப்புகளைப் பெறுகின்றார். இவரும் மக்கள் பிரதிநிதிகளின் அங்கலாய்ப்புகளுக்கு பதில் அளித்தே ஆக வேண்டும். எனவே விடயங்களை சரி பிழை கண்டு இனிமேலும் இத்தகைய பிழைகள் நேராவண்ணம் பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பெரும் பொறுப்பாகும்.
    கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம்கள் உறவு மென்மேலும் பலப்படுத்தப்பட் வருகின்றன. காளான்கள்போல் காலத்திற்கு காலம் தோன்றி உடன் மறையும் வாக்கு வேட்டைக்காரர்கள்தான் மக்கள் மனங்களைப் பெரிதும் போராடிக் காயப்படுத்தி வருகின்றனர். அதுபற்றி மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்போதுதான் அவ்வேட்டைக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் முதுகில் மாட்டுத்தோலை அணிந்து மிக அவதானத்துடன் மக்கள்முன் தோன்றுவர்.

    ReplyDelete

Powered by Blogger.