Header Ads



சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில் வந்த பேரலைகள் - இதுவரை 832 பேர் வபாத்


சக்­தி­வாய்ந்த பூகம்­பத்தைத் தொடர்ந்து இந்­தோ­னே­சி­யாவின் மத்­திய சுலா­வெசி தீவைத் தாக்­கிய சுனாமி கார­ண­மாக சுமார் 832 பேர் பலியாகியுள்­ளனர்.

சுனாமி தாக்­கத்­திற்கு இலக்­கான பலு நக­ரத்தில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 832 என அறிக்­கை­யிட்­டுள்ள தேசிய இடர்­மு­க­வ­ரகம் சனிக்­கி­ழ­மையும் மீட்­புப்­ப­ணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக அச்சம் வெளி­யிட்­டி­ருந்­தது.

7.5 ரிச்டர் அளவில் இடம்­பெற்ற பூகம்­பத்தைத் தொடர்ந்து ஏற்­பட்ட சுனாமி பேர­லை­யினால் சுமார் 350,000 மக்கள் வாழும் பலு நக­ரத்தின் கரை­யோ­ரத்தில் பகு­தி­ய­ளவில் மூடப்­பட்ட நிலையில் உடல்கள் காணப்­பட்­டன.

இதற்கு அருகில் இருக்கும் சுமார் 330,000 மக்கள் வாழும் டொங்­காலா நக­ரத்தின் நிலைமை இதை­விட மிக மோச­மாக இருக்கும் என அதி­கா­ரிகள் அச்சம் வெளி­யிட்­ட­தாக இந்­தோ­னே­சிய தலை­நகர் ஜகார்த்­தா­வி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ள­ரான டொமி சொயிட்­ஜிப்டோ தெரி­வித்தார்.

அங்­கி­ருந்து உயி­ரி­ழப்­புக்கள் தொடர்பில் இது­வரை எவ்­வித தக­வல்­களும் கிடைக்­கப்­பெ­றாமை அங்கு காணப்­படும் ஆபத்து நிலை­யின உணர்த்­து­வதாக் அவர் தெரி­வித்தார்.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று மாலை ஆரம்­ப­மா­க­வி­ருந்த கடல் களி­யாட்டக் கொண்­டாட்­ட­மொன்­றுக்­கான ஆயத்­தங்­களில் ஈடு­பட்­டி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் கவ­லைகள் அதி­க­ரித்­துள்­ள­தாக தேசிய இடர் முக­வ­ரகம் மேலும் தெரி­வித்­துள்­ளது. 

இத­னி­டையே நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லைகள் காய­ம­டைந்­தோரின் வரு­கையால் நிரம்பி வழி­வ­தோடு ஏரா­ள­மா­னோ­ருக்கு திறந்த வெளியில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­வ­தோடு தப்பிப் பிழைத்­த­வர்கள் உயி­ரி­ழந்­தோரின் சட­லங்­களை மீட்­ப­தற்கு உதவி வரு­கின்­றனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுனாமி அச்சம் தோன்­றி­ய­போ­திலும் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­றாது பலர் தமது செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தனர் என இந்­தோ­னே­சி­யாவின் இடர்­மு­க­வ­ர­கத்தின் பேச்­சாளர் சுடோபோ புர்வோ நுக்­ரோஹோ தெரி­வித்தார்.

சிலர் ஆறு மீற்றர் உய­ர­மான மரங்­களில் ஏறி சுனா­மி­யி­லி­ருந்து தப்­பித்துக் கொண்­ட­தாகத் தெரி­வித்த அவர் மணிக்கு 800 கிலோ­மீற்றர் வேகத்தில் வந்த சுனாமி வீடு­க­ளையும் உட்­கட்­ட­மைப்­புக்­க­ளையும் தகர்த்­த­தாகத் தெரி­வித்தார்.

பாதிப்­புக்கள் பர­வ­லாக இடம்­பெற்­றுள்­ளன. ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள், வைத்­தி­ய­சா­லைகள், கடைத் தொகு­திகள் மற்றும் ஹோட்­டல்கள் இடிந்து வீழந்­துள்­ள­தோடு, பால­மொன்றும் அள்­ளுண்டு சென்­றுள்­ளது, பலு­விற்­கான பிர­தான அதி­வேக நெடுஞ்­சாலை மண்­ச­ரி­வினால் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

பூகம்­பத்தின் பின்­ன­ரான சிறு அதிர்­வுகள் சனிக்­கி­ழ­மையும் தொடர்ந்து ஏற்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

பூகம்பம் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து 80 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பலுவில் அமைந்­துள்ள வாகனத் தரிப்­பி­ட­மொன்­றி­லி­ருந்து ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்ள காணொ­லி­யொன்றில் கடல் அலை­யினால் பல கட்­டங்கள் வீழ்த்­தப்­ப­டு­வதும் பெரிய பள்­ள­வா­ச­லொன்று சேத­ம­டை­வதும் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

கரை­யோ­ரத்­தி­லி­ருந்த வீடுகள் கடல் அலையில் அள்­ளுண்டு செல்­வதைக் கண்­டதும் நான் ஓட ஆரம்­பித்­து­விட்டேன் என பலு பிர­தே­ச­வா­சி­யான ருசி­டான்டோ தெரி­வித்தார்.

பூகம்பம் மற்றும் சுனாமி கார­ண­மாக பலுவில் பாரிய மின் தடை ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக பிர­தேசம் முழு­வதும் தொலைத் தொடர்­புகள் முற்­றாக சீர்­கு­லைந்­துள்­ள­தோடு கடந்த சனிக்­கி­ழமை யன்று மீட்புப் பணி­களை ஒருங்­கி­ணைப்­பதில் பாரிய சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

கிழக்­கி­லி­ருந்தும் தெற்­கி­லி­ருந்தும் பலு­வுக்குச் செல்­வ­தற்­கான வீதிகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

பூகம்­பத்­தினால் விமான ஓடு­பாதை மற்றும் கட்­டுப்­பாட்டுக் கோபுரம் என்­பன சேத­ம­டைந்­ததன் கார­ண­மாக நக­ரத்தின் விமான நிலையம் மூடப்­பட்­டுள்ள நிலையில், உத­வி­களை உள்ளே கொண்­டு­வரச் செய்­வ­தற்­காக அதனை மீளத் திறப்­ப­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்து வரு­வ­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

ஒடுக்­க­மான குடா­வொன்­றினைச் சுற்றி அமைக்­கப்­பட்­டுள்ள இந் நகரம் சுனாமி அலைகள் புகுந்­ததன் கார­ண­மான மிகப் பெரிய குடா­வாக மாறி­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்டோர் மற்றும் உயி­ரி­ழந்­தோரை தேடிக் கண்­டு­பி­டித்து மீட்­ப­தற்­காக இரா­ணு­வத்­தினர் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­தே­னே­சிய ஜனா­தி­பதி ஜோகோ விடோடோ தெரி­வித்தார்.

தேசிய அனர்த்த முக­வ­ரகம் உள்­ளிட்ட அனைத்து வட்­டா­ரங்­க­ளையும் ஒன்­றி­ணைக்­கு­மாறு அர­சியல் மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ருக்கு ஏலவே பணிப்­புரை விடுத்­துள்ளேன் என அவர் மேலும் தெரி­வித்தார். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் உள்­ளிட்ட அவ­சர நிலை­களைக் கையாள்­வ­தற்கும், அடிப்­படை தேவைகள் அவ­சி­யப்­ப­டு­மி­டத்து அவற்றை தயா­ரித்தல் உள்­ள­டங்­க­லான பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அகற்­றுதல் செயற்­பா­டு­களில் இணைந்து செயற்­ப­டு­மாறு இரா­ணுவத் தள­ப­திக்கு பணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

மீட்புப் பணி­களில் இணைந்­து­கொள்­வ­தற்­காக சரக்கு விமா­னத்தில் வைத்­தி­யர்­க­ளையும்; உதவிப் பொருள்­க­ளையும் அனுப்பி வைக்கும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கள வைத்­தி­ய­சா­லை­யொன்றை விரைவில் நிறு­வக்­கூ­டி­ய­தாக இருக்­கு­மென எதிர்­பார்ப்­ப­தாக அண்­டட்டா பிராந்­திய வைத்­தி­ய­சாலைப் பணிப்­பாளர் கெமங் அதி சுஜேந்­திரா தெரி­வித்தார்.

எமக்கு மருந்துப் பொருட்கள், மருத்­துவ பணி­யா­ளர்கள், தார்ப்­பாய்கள், மெத்தை விரிப்­புக்கள் மற்றும் மேலும் பல பொருட்­களும் தேவை­ப­ப­டு­கின்­றன. பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு மக்கள் உத­வு­வார்கள் என எதிர்­பார்ப்­ப­தாக அவர் தெரி­வித்தார்.

இத­னி­டையே, வீதிக் கட்­ட­மைப்­புக்கள் மிக மோச­மாக சேத­ம­டைந்­தி­ருப்­ப­தனால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு ஜகார்த்தா மற்றும் பிற நக­ரங்­க­ளி­லி­ருந்து உத­விகள் வந்­த­டைய தாம­த­ம­டை­ய­லா­மென இந்­தோ­னே­சிய தலை­நகர் ஜகார்த்­தா­வி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ள­ரான டொமி சொயிட்­ஜிப்டோ தெரி­வித்தார்.

அண்­மித்த நக­ரங்­களில் தற்­காலிக் கூடா­ரங்கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது பொரும்­பா­லான மக்கள் தமது வீடு­க­ளுக்கு வெளியே தங்­கி­யி­ருக்­கின்­றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தேனேசியாவின் வானிலை மற்றும் பூகற்பவியல் முகவரகம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் 34 நிமிடங்களின் பின்னர் அது நீக்கப்பட்டது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நேரத்திலேயே அலைகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், பலுவைத் தாக்கிய சுனாமி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம் முகவரகம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை டொங்காலாவில் சக்தி குறைந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்தார், குறைந்தது 10 காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1927 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பலு பிரதேசம் சுனாமி அனர்த்தத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

 M.I.Abdul Nazar



1 comment:

  1. Its not Sunami, SECRET SOCIETY testing nuclear under the deep sea & THEY ARE TRY TO CONTROL MUSLIM'S POPULATION IN THE WORLD BY THIS ACTION!

    ReplyDelete

Powered by Blogger.