Header Ads



விடாப்பிடியாக நிற்கும், பெண் ஊடகவியலாளர் - அந்த 4 அமைச்சர்கள் யார்...????


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் வௌியான அறிக்கையின் உண்மைத்தன்மைக்காக முன்நிற்பதாக ‘த ஹிந்து’ பத்திரிகையின் செய்தியாசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வௌியிட்ட பின்னர், அது உண்மைக்குப் புறப்பானது என சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வௌிவிவகார அமைச்சு, அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் அறிக்கைகளை வௌியிட்டனர்.

இது குரோதத்தைத் தூண்டும் கருத்து என இந்தியப் பிரதமர் அலுவலகம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமது பத்திரிக்கை செய்தியைத் தொகுத்த ஊடகவியலாளர் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் பல்வேறு ஆதாரங்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக த ஹிந்து பத்திரிகையின் செய்தியாசிரியர் என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது செய்தியாளர் கவனமாக ஆய்வு செய்து பதிவிட்ட செய்தி தொடர்பில் முன்நிற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் சகாக்களே தன்னிடம் அந்தத் தகவலைக் கூறியதாகவும் நான்கு அமைச்சர்களுடன் பேசி, உறுதி செய்த பின்னரே தாம் செய்தி வௌியிட்டதாகவும் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் – உங்கள் அமைச்சரவையின் சகாக்களே என்னிடம் இதனை கூறினர். இந்த விடயம் தொடர்பான நம்பகத்தன்மை குறித்து நீங்கள் கூறிய விடயங்களுக்கு நான் மறுப்பு தெரிவிக்கின்றேன். நான் 4 அமைச்சர்களுடன் பேசினேன். உறுதி செய்தேன்.

அவ்வாறெனில், த ஹிந்து பத்திரிகை ஊடகவியலாளர் கூறும் அந்த அமைச்சர்கள் யார்?

1 comment:

Powered by Blogger.