Header Ads



இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக, நலின் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

நீதிபதி நலின் பெரேரா இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நலின் பெரேராவை நீதியரசராகப் பெயரிடுவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.

ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

கோட்டே மற்றும் குருதலாவ புனித தோமஸ் கல்லூரிகளின் பழைய மாணவரான நலின் பெரேரா, 1980 ஆம் ஆண்டு சட்டத்துறைக்குள் பிரவேசித்தார்.

1984 ஆம் ஆண்டு அவர் நீதவானாக நியமிக்கப்பட்டார்.

கல்கிசை, வலஸ்முல்ல, களுத்துறை மற்றும் கோட்டை நீதிமன்றங்களின் நீதவானாக செயற்பட்ட நலின் பெரேரா, 1990 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை நீதவான்கள் சங்கத்தின் விரிவுரையாளர்கள் சபையின் உறுப்பினரான நலின் பெரேரா, கனடாவின் பொதுநலவாய அமைப்பின் சட்டக்கல்வி நிறுவனத்தில் உயர் கல்வி கற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாகவும் செயற்பாட்டார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசராக அவர் நியமிக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.