Header Ads



வட,கிழக்கில் 28.000 வீடுகளை அமைக்க திட்டம் - பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுமா..?

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே, 28 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

1.2 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும், அமைக்கப்படும்.

இந்தியாவின் என்டி என்டர்பிரைசஸ், சிறிலங்காவைச் சேர்ந்த யப்கா டெவலப்பேர்ஸ்,  மற்றும் ஆர்ச்சிடியம் நிறுவனம் ஆகியனவே இந்த வீடுகளை அமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளன.

முன்னதாக, சீன நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இந்தப் பணி இந்திய – சிறிலங்கா நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட  கிழக்கில் போரினால் முஸ்லிம்களுக்கும் பாதிக்கப்பட்டனர்.

புலிகளின் இனச்சுத்திகரிப்பினாலும் முஸ்லிம்களுக்கும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பல ஆயிரம் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை: ஆகவே குறித்த வீடுகள் முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதே நியாயமானது.

4 comments:

  1. Shouldn't be given to single muslim which encourage the illegal settlements.

    ReplyDelete
  2. மோடி யை முஸ்லிம்களுக்கு பிடிக்காதே.
    அதனால், எப்படி தான் கெஞ்சினாலும் உண்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் வீடுகளை ஏற்க மாட்டார்கள்

    ReplyDelete
  3. உண்மையான முஸ்லிம்கள் இலங்கையில் இல்லை உண்மையான முஸ்லி்ம் அரேபியன் மட்டுமே மற்றவா்கள் மதம் மாறிகள்

    ReplyDelete
  4. These racist Perumal must know,There is no any group call Muslims,Christian or Buddhist,All the people converted.Buddhism came from Nepal,Islam came from Arabia and Christian from Palestine and Hinduism from India.every one in Srilanka following foreign religion no any Srilanka religion here.

    Before Buddhism in Srilanka all followed Jeina religion.After the visit of Monk Mihindu Sinhalese converted to Buddhism.Portugese spread their violent religion in coast line and converted poor people. Massacred thousands who not converted.keep in mind that Religion not belongs to any particular community but it is Universal any one can follow any religion.

    But Arab lived here for more than 2000 years and they are clever traders and travelers and changed the world order.Arabs and Islam gave freedom to the people who are oppressed as so called low cast and born by god's leg.

    ReplyDelete

Powered by Blogger.