Header Ads



2030 இல் உலகில் 4 வது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான்

2030-ல் உலகில் நான்காவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான்  ஊடகம் தவன்( DAWN) தெரிவித்து உள்ளதாவது:-

2030-ல் உலகில் நான்காவது மிகப்பெரிய  மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும். தற்போது பாகிஸ்தான் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி மக்கள் தொகை அதிகரித்தால் விரைவில் அந்த பட்டியலில் பாகிஸ்தான் 4 வது இடத்தை பிடிக்கும்.

கராச்சியில் டவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழுவின் விவாதத்தில் சில நிபுணர்கள் இது குறித்த தகவலை வெளியிட்டனர்.  அந்த கலந்துரையாடலில் விழிப்புணர்வு திட்டங்களின் தேவை மற்றும் பெண்கள் கல்வி பற்றியும் வலியுறுத்தினர். கர்ப்பம் மற்றும் குழந்தை இறப்பு வீதம் போன்ற சிக்கல்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில்  பாகிஸ்தானில்  80 சதவீத   இளம் பெண்கள் கர்ப்பமடைவது  சுட்டிகாட்டபட்டது.

கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்ட இரண்டு  முக்கிய காரணிகள் ஆண் குழந்தை வேண்டும் என்ற "ஆசை" மேலும் முடிவெடுக்கும் தன்மை பெண்களிடம் இல்லாதது ஆகும் .

கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2017 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் வெளியிட்ட  புள்ளிவிபரப்படி   நாட்டின் மக்கள்தொகை 20.8 கோடியாக உயர்ந்துள்ளது. 1998 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் மக்கள்தொகை 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

1 comment:

  1. உலக அமைதிக்கு ஆபத்து

    ReplyDelete

Powered by Blogger.