Header Ads



16 வயதினிலே 2 ரூபாய் சம்பளத்திற்காக, கோழிக்கூட்டை சுத்தம்செய்த ஜனாதிபதி மைத்திரி

இரண்டு ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் கோழிக்கூடு சுத்தம் செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று கண்டி பொல்கொல்ல கூட்டுறவு நிறுவனத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சையில் சித்தி அடைந்தால் மாத்திரம் ஒரு பிள்ளையின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. சாரணர் பயிற்சிகளை பிரயோசமான முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சவால்களை வெற்றி கொள்ளும் மனநிலை ஏற்படுகின்றது.

18 வயதில் ஜனாதிபதி சாரணர் விருதை பெறுவதற்கு, பல செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். 4 வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே சாரணர் விருது வழங்கப்படுகின்றது.

நான் 16 வயதாக இருந்த காலப்பகுதியில் சாரணராக வீடு வீடாக சென்று வேலை செய்துள்ளேன். ஒரு நாள் வீடு ஒன்றிற்கு சென்று வேலை கேட்டேன். பல வருடங்கள் சுத்தம் செய்யாத கோழி கூடு ஒன்றை சுத்தம் செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது.

நான் சுத்தம் செய்யும் பணியை 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் செய்தேன். அதற்காக வீட்டின் உரிமையாளர் இரண்டு ரூபாயை சம்பளமாக எனக்கு கொடுத்தார் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. நல்லாற்சிக்காக நம்பி வந்த மக்களை ஏமாற்றிய பாவி இவர், இவரை பெரிதுபடுத்தும் செய்திகள் வேண்டாம்.

    ReplyDelete
  2. இப்ப இவர் கோழிக்கூடு துப்பரவு பண்ணினது ரொம்ப முக்கியம். நாளைக்கு இந்நாட்டு மக்களை பிச்சை எடுக்க வைக்க போகிறார் என்பதை பேச ஆளில்லை

    ReplyDelete
  3. useless and dont know what to talk
    i thought he will do good service to the nation but greedy

    ReplyDelete
  4. கோழி கூட்டை சுத்தம் செய்த மாமா நாட்டை குப்பை ஆக்கிவிட்டார்.

    ReplyDelete
  5. It suits for him even now.

    ReplyDelete
  6. நாட்டின் பிரச்னைகள் பயங்கர பூதாகரமாக பெருகி குறைந்தது டொலருக்கு எதிராக இலங்கை நாணயம் தொடர்ந்தும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து சென்று கொ்ண்டு ஒவ்வொரு வாரமும் பெற்றோல், எரிபொருட்கள் அனைத்தின் விலையையும் அதிகரிந்து இந்த நாட்டுமக்களை துச்சமாக மதித்து அவர்களின் பொருளாதார நிலைபற்றிய எந்த அக்கறையும் இன்றி ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளருக்கு இப்போது கோழிக்கூடு துப்பரவு செய்வதுதான் பொறுத்தமான வேலையாகத் தெரிகிறது. இந்த நாட்டு மக்களுக்கு கடவுளின் கருணைமட்டும்தான் தஞ்சம்.

    ReplyDelete

Powered by Blogger.