Header Ads



TNTJ யை விட்டும், பிரிய தீர்மானம் - 23 இல் தவ்ஹீத் ஜமாத்தின் விசேட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் நிர்வாக குழறுபடிகளில் இருந்து நீங்கி தூய்மையான கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுப்பது பற்றியும், ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக குழறுபடிகளை சரிசெய்வது பற்றியும், முறை தவறி அடிப்படை உறுப்பினர் நீக்கம் என்று அறிவிக்கப்பட்ட ரஸ்மின், ராஸிக் உள்ளிட்ட 07 நபர்களையும் அமைப்பில் உடனடியாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12.09.2018ம் திகதி கொழும்பு புதிய நக மண்டபத்தில் செயற்குழு கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.

அப்போது SLTJ யின் தற்போதைய நிர்வாகம் கலகம் அடக்கும் பொலிசாரை வரவழைத்து கிளை, மாவட்ட நிர்வாகிகளை உள்நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், பின்னர் SLTJ நிர்வாகம் வைத்துக்கொண்டிருந்த பெயர் பட்டியல் பிரகாரம் செயற்க்குழு அரங்கத்திற்க்குள் சென்ற கிளை, மாவட்ட, நிர்வாகிகளை வெளியேற்றமும் செய்தார்கள்.

இதுவரை காலம் இல்லாத வகையில் செயற்குழு அரங்கத்திற்க்குள்ளேயே பொலிசாரை வரவழைத்து உறுப்பினர்களை மனமுடைய செய்தது SLTJ நிர்வாகம்.

செயற்க்குழுவுக்கு வருகை தந்து அனியாயமாக வெளியேற்றப்பட்ட கிளை, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் எதிரில் இருந்த விகாரமஹா தேவி பூங்காவில் ஒன்று கூடி எடுத்த தீர்மானத்தின் படி எதிர்வரும் 23ம் திகதி தவ்ஹீத் ஜமாத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் மடவலை பஸார் சன்சைன் மண்டபத்தில் காலை 09.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை விட்டும் பிரிந்து தனித்து சுயாதீனமான செயல்பாடுகளை முன்னெடுத்தல், 

07 பேர் நீக்கம் பற்றி முழுமையாக ஆராய்வதுடன்,

எதிர்கால தஃவா, சமுதாய பணிகளை சிறப்பாக முன்னெடுத்தல் பற்றியெல்லாம் விரிவாக அலசப்படவுள்ளது.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நடப்பு நிர்வாகத்தின் தவறான போக்கை கண்டித்து ஏற்பாடாகியுள்ள விசேட பொதுக்குழுவில் கிளை, மாவட்ட நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பிரச்சாரகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியும். 

கலந்து கொள்ளும் அனைவரும் கிளை நிர்வாகங்கள் ஊடாக மாவட்ட நிர்வாகம் அல்லது பொறுப்பாளருக்கு வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். என தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு ஒருங்கிணைப்புக் குழு  தெரிவித்துக்கொள்கிறது.

M.A.L.M ரிஸான்

பொதுக்குழு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் - தவ்ஹீத் ஜமாத்

7 comments:

  1. Jamaths are dividing every Muslims. We lose our strength when we are divided.

    ReplyDelete
  2. nalla natta anniyarhala usuppethi utttutu ippa neenga adichi kondu saahura.izu thewaya…..summa irunda samozaayatha kaati kuduthuteemgale.

    ReplyDelete
  3. These TNTJ & SLTJ are really there for Islamic stuffs???
    what we can genuinely see is they were keep blaming others now they started to fight inside them & Guiding the blind followers to another level which is not Islam.

    ReplyDelete
  4. TNTJ & SLTJ is மார்க்க கூத்தாடிகள்

    ReplyDelete
  5. இன்னும் எத்தனை மத்ஹபாகதான் பிரிந்து தொலைக்க போரீங்கடா மாடசாமிகள் வெட்கம் தான் இல்லயா ஒங்களுக்கு பண்றிய விட்டு நாய் பிரிந்ததட்காக நாய் என்ன சுத்தமாகவா மாறப்போகுது

    ReplyDelete
  6. இலங்கையிலெ எவன் தூய்மையான தௌஹீத் செய்தானாம்..எல்லாமே
    பண்த்திற்காக தான்...

    ReplyDelete
  7. This is the pathetic, pitiful situation in our Ummah.People who come front saying Thawah, do not have any unity within themselves. Besides, our riligion becomes a football for these folks. May Allah protect us fro all evils.

    ReplyDelete

Powered by Blogger.