Header Ads



உதுமாலெப்பை SLMC யில் இணைவதில், எனக்கு ஆட்சேபனை இல்லை - நஸீர் Mp


கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மத்தியகுழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இதுவிடயமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட  பதவிகளை இராஜினாமாச் செய்த விடயங்களை  அறிந்து கொண்டேன்.

பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களில் ஒருவரான இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளவதில் எனக்கு எந்தப்பிரச்சினையுமில்லை ஏனெனில் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் காலத்திலும் தற்போதைய தலைவரும் அமைச்சருமான றவூப்ஹக்கீம் அவர்களது காலத்திலும் கட்சியை விட்டு சிலர் சென்றனர்.பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டனர்.கட்சியின் கதவு எப்போதும் திறந்துள்ளது கட்சியில் யாரும் இணைந்து கொள்ளலாம் கட்சியை விட்டு யாரும் போகலாம் இது யாவரும் அறிந்த விடயம்.

நான் எனது தனிப்பட்ட  விடயத்திற்கோ அல்லது எமது போராளிகளுக்கோ தலைசாய்க்காமல் எமது கட்சியின் நலனை மாத்திரம் கவனத்தில் கொண்டு இக்கட்சியில் இணைவதற்காக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை வரலாம். ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இவர் இணைவதை  நான் தடுப்பதாக சில முகநுால்களிலும் இணையத்தளங்களிலும் பொய்யான செய்திகளை வதந்தியாகப்பரப்பி வருகின்றனர்.இவ்விடயத்தை நான் முற்றாக மறுக்கின்றேன்.

இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றி நான் இன்னும் இவரிடம் கதைக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கட்சியில் இணையும் விடயத்தில் கட்சியின் தலைமையும் உயர்பீட உறுப்பினர்களும் இணைந்து பொறுத்தமான முடிவுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ஐ.எம்.றியாஸ்)

2 comments:

  1. MSU மு.கோவில் இணைவது அவரது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்த்தமனத்தைக் கொடுக்கும். அக்கட்சி இன்று அழிவினை நோக்கி செல்கின்து

    ReplyDelete
  2. These people are mafia of Ampara District. This Uthuman and Athaullah cheated and robbed in the name of Ampara Dist. muslims.

    ReplyDelete

Powered by Blogger.