Header Ads



பொது மன்னிப்பு கிடைக்குமா..?

பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு இந்நிலை என்றால், இந்நாட்டுக்கு “அபசரனை” என்றுதான் கூறவேண்டியுள்ளது என சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நேற்று (09) அம்பியுலஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.  இதன்போது, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என கருதுகின்றீர்களா? என  ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, யாருடைய மன்னிப்பும் தேவைப்படாது என  தேரர் கூறினார். பொது மன்னிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதா? என கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் தேரர் பதிலளித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு கடின வேலையுடன் கூடிய 06  வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

1 comment:

  1. Ven.Gnanassara had committed a grave offence by insulting Homagama Magistrate court. His behavior on this day was recorded. He had insulted Mano Ganeshan and called the thugs to attack Aluthgama and assaulted a Buddhist monk at Slave Island for being with Muslims. Nature had trapped him. He is not entitled for Pardon from President. If Pardon is given, President will come under the curse of nature.

    ReplyDelete

Powered by Blogger.