Header Ads



இலங்கையில் டொலரின் பெறுமதி, அதிகரிக்க டிரம்தான் காரணம் - அரசாங்கம்

அமெரிக்க வங்கிகளின் வட்டிவீதத்தை அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப்   அதிகரித்திருக்கின்றார். குறிப்பாக 0.2 இலிருந்து 1 வீதமாக வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் உலகில் பல நாடுகளிலும் டொலரின் பெறுமதி அதிகரிக்கின்றது. இந்தியாவில் 11 ரூபாவால் அதிகரித்திருக்கின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைகின்ற  நிலையில் இன்றைய தினம்  அமெரிக்க டொலர் ஒன்றின்  விற்பனை விலை  ரூ. 167.41 சதமாக   உயர்வடைந்தது.  கொள்வனவு விலை ரூ.163. 83 சதமாக உயர்வடைந்துள்ளது.   

இலங்கையில்  இதுவே மிகக்கூடிய அளவான டொலர் விற்பனை விலையாக   கருதப்படுகின்றது.   இது  தொடர்பில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே  அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேரனாரட்ன இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.