காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார்.
காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார்.
தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தினமும் தனது காதலன் கல்லறைக்கு சென்று வருகிறார். 23 வயதான தருஷி தனிமையில் தனது காதலுடன் வாழ்ந்து வருவது போன்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
1 கருத்துரைகள்:
நாட்டில இத்தனை பிரச்சினை இருக்கும் போது இப்ப செத்தவனுக்கு பிறந்த நாள் ரொம்ப முக்கியம்!!!
Post a Comment