Header Ads



பலஸ்தீனுக்காக வாயைத்திறந்தார் ஜனாதிபதி

-நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்-

பலஸ்­தீன விவ­காரம் தொடர்பில் ஐ.நா. உட்­பட உலக நாடுகள் கூடுதல் கரி­சனை காட்ட வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இலங்கை,  பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாகத் தொடர்ந்தும் குரல் கொடுக்­கு­மெ­னவும் வலி­யு­றுத்­தினார்.

நேற்று முன்­தினம் ஐ.நா. பொதுச்­சபை அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு குறிப்­பிட்டார்.

"சர்­வ­தேச அர­சியல் சூழலை எடுத்து நோக்­கினால் அவற்றில் பலஸ்­தீன விவ­காரம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். பலஸ்­தீன மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் விரி­வா­னதும் வலு­வா­ன­து­மான கவ­ன­யீர்ப்பை உலக நாடு­க­ளி­ட­மி­ருந்து வேண்டி நிற்­கின்­றன.

பலஸ்­தீன விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­காண வேண்­டு­மானால் இதில் சர்­வ­தேச சமூகம் தற்­போது காட்டும் கரி­ச­னையை விடவும் கூடுதல் கரி­சனை செலுத்­தப்­பட வேண்டும்.

இலங்கை எப்­போதும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­ப­துடன் அவர்­க­ளது நெருக்­க­டி­க­ளிலும் பங்­கெ­டுத்து வரு­கி­றது என்­பதை இங்கு நினை­வூட்ட விரும்­பு­கிறேன்.

பலஸ்­தீன விவ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் சபை இது­வரை முன்­னெ­டுத்த பணி­களை விடவும் அதிக முயற்­சி­களை முன்­னெ­டுக்கும் என நம்­பு­கிறேன்" என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் தனது உரையில் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி தனது உரையில் பெயர் குறிப்பிட்டு மற்றொரு நாட்டுக்காக குரலெழுப்பியமை பலஸ்தீனுக்காக மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

1 comment:

Powered by Blogger.