Header Ads



யாராவது தன்னை காப்பாற்றுவார்கள் என, பிரபாகரன் இறுதிவரை நம்பினார் - மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது இராணுவத்தை அதீதமாக நம்பினார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாராவது அவரை காப்பாற்றிவிடுவார்கள் என்று இறுதி வரையிலும் அவர் நம்பியிருந்தார். எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டிய தேவை குறித்து இந்தியாவிற்கு தெளிவுப்படுத்தினோம். இந்நிலையில், இந்தியாவின் கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வந்தோம்.

இந்தியா கேட்டுக்கொண்டதற்கமையவே இறுதி போரின் போது பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தினோம். விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்த பின்னர் இலங்கையில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவர் இருந்திருந்தால் இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு மரணங்கள் ஏற்பட்டிருக்கும். எனினும், அரசியல் நோக்கம் கருதி பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சிலர் பேசி வருகின்றனர்.

பிரபாகரன் இராணுவத்திடம் சரணடைவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை. அவர் சரணடைய கூடியவர் அல்ல. அவர் சரணடைய தயாராக இருந்திருந்தால் அவரை கைது செய்திருப்போம்.

சரணடையுமாறு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்தோம். பிரபாகரன் அவரது இராணுவத்தை அதீதமாக நம்பினார்.

யாராவது அவரை காப்பாற்றிவிடுவார்கள் என்று இறுதி வரையிலும் அவர் நம்பியிருந்தார். எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

இதேவேளை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்ததாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மிஸ்டர் மகிந்த அவர்களே பிரபாகரன் சரணடையவில்லையென்று யுத்த குற்றங்களை மறைக்க நீங்கள் வேண்டுமென்றால் பொய் சொல்லலாம். ஆனால் இராணுவத்திடம் வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த பிரபாகரனை தலையை குதறி இராணுவம் கொன்றதே உண்மை. பிரபாகரன் போன்ற பயங்கரவாதிகளை உயிருடன் விடுவதே தவறென்று உணர்ந்து மக்கள் நலனை கருத்திற்கொண்டு இராணுவம் இப்படி செய்திருக்கலாம். அது தவரில்லை

    ReplyDelete

Powered by Blogger.