Header Ads



கவனிப்பாரற்று கிடக்கும், அஷ்ரப் இல்லம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது இறுதிக் காலத்தை அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில் பிர­தே­சத்தில் கழிக்க வேண்­டு­மென்ற எண்­ணத்தில் உரு­வாக்­கிய லீடர் அஷ்ரஃப் இல்லம், அவர் மர­ணித்து பதி­னெட்டு ஆண்­டுகள் கடந்­து­விட்ட நிலை­யிலும் இது­வரை எவ­ராலும் கவ­னிப்­பா­ரற்ற நிலையில் காணப்­பட்டு வரு­கின்­றது.

இந்த இல்­லத்­தினை புன­ர­மைத்து மறைந்த தலைவர் அஷ்­ரஃபின் கன­வினை நன­வாக்க சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இப்­பி­ராந்­திய மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

ஒலுவில் பிர­தேச எதிர்­கால சந்­த­தி­யி­னரின் உயர்­கல்வி அபி­வி­ருத்­தியை நோக்­காகக் கொண்டும், அம்­மக்­களின் வாழ்­வா­தா­ர­ததை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கி­னையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டும் அப்­பி­ர­தே­சத்தில் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஒலுவில் துறை­முகம் ஆகி­யன மர்ஹூம் அஷ்­ரஃ­பினால் அமைக்­கப்­பட்­டன.

இவ்­விரு பாரிய நிறு­வ­னங்­க­ளையும் அமைத்த மர்ஹூம் அஷ்ரஃப் தனது இறு­திக்­கா­லத்தை ஒலுவில் பிர­தே­சத்தில் கழிக்க வேண்­டு­மென்ற இலக்­குடன் லீடர் ஹவுஸ் என்ற பெயரில் நவீன முறையில் தனக்­கா­னதும் வட கிழக்கு மாகாண மக்­களின் அர­சியல் செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும் அர­சியல் பணி­ம­னை­யா­கவும் இவ்­வில்­லத்­தினை அவர் நிர்­மா­ணித்தார். இந்த இல்­லத்தின் நிர்­மா­ணப்­பணி சுமார் 95 சத­வீ­தத்­தினை எட்­டி­யி­ருந்த வேளையில் அவர் இயற்கை எய்­தினார்.

இவ்­வீட்­டுக்­கான பின்­னு­ரித்­தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் வளர்ச்­சிக்­கென செயற்­ப­டுத்­தி­யி­ருந்த லோட்டஸ் நம்­பிக்கை நிதி­யத்தின் பெயரில் எழு­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்ட பீட­மொன்றை உரு­வாக்கி தான் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெறும் கால­கட்­டத்தில் ஒலுவில் பிர­தே­சத்­தி­லுள்ள இவ்­வீட்டில் இருந்து கொண்டு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சட்­டத்­துறை வரு­கை­தரு விரி­வு­ரை­யா­ள­ராக இருந்து எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சட்­டத்­து­றைசார் கல்­வியினை போதிக்க வேண்டும் என்ற எண்­ணத்­தினை மர்ஹூம் அஷ்ரஃப் கொண்­டி­ருந்தார்.

பல்­வேறு உய­ரிய நோக்­கத்­தினை இலக்­காகக் கொண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட இவ்­வில்லம் தற்­போது கவ­னிப்­பா­ரற்று சமூக விரோத செயற்­பா­டுகள் இடம்­பெறும் தள­மா­கவும், விஷ ஜந்­துக்­களின் அமை­வி­ட­மா­கவும், கால்­ந­டை­களின் உறை­வி­ட­மா­கவும் காட்சி தரு­கின்­றது.

இவ்­வில்­லத்­தினை மறைந்த பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரஃபின் நினை­வில்­ல­மாகக் கொண்டு பொது நிறு­வ­னங்­க­ளுக்­கா­கவும், கல்­விக்­கூட செயற்­பா­டு­க­ளுக்­கா­கவும் மாற்­றி­ய­மைத்து செயற்­ப­டுத்­தும்­படி இப்­பி­ர­தேச மக்கள் பல்­வேறு தட­வைகள் கோரிக்கை விடுத்து வரு­கின்ற போதிலும் இது­வரை இவ்­வி­ட­யத்தில் எவ்­வித முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் ஸ்தாபகத் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் எந்த நோக்­கத்தின் அடிப்­ப­டையில் இவ்­வில்­லத்­தினை அமைத்­தாரோ அந்­நோக்­கத்­தினை இலக்­காகக் கொண்டு அன்­னாரின் நினை­வில்­ல­மாக இந்த லீடர் ஹவு­ஸினை புன­ர­மைத்து அன்­னாரின் கன­வினை நன­வாக்க சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென இப்­பி­ராந்­திய மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் பிரதித் தலை­வரும், ஸ்தாபகச் செய­லா­ளரும், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான எஸ்.எம்.ஏ.கபூ­ரிடம் வின­வினோம். "மறைந்த பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பல்­வேறு கன­வு­களின் அடிப்­ப­டையில் ஒலுவில் பிர­தே­சத்தில் லீடர் ஹவுஸ் என்னும் இவ்­வில்லம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

தலை­வரின் இறுதிக் கால­கட்­டத்­தினை ஒலுவில் பிர­தே­சத்தில் கழிக்க வேண்­டு­மென்ற நோக்­கு­டனும், இப்­பி­ராந்­திய மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் குறை­பா­டு­க­ளையும், பிர­தே­சத்தில் மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்து அறிந்து மக்களின் எதிர்கால நன்மைக்காக செயற்படுவடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட இவ்வில்லத்தினை மிக விரைவில் புனருத்தாபனம் செய்து அன்னாரின் நினைவில்லமாகவும் அதனை ஓர் கலைக் கூடமாகவும் மாற்றியமைப்பதற்காக தற்போதைய கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதனை மக்கள் பணிமனையாகவும் அரசியல் கேந்திர நிலையமாகவும் மாற்றியமைக்க மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்" என்றார்.

எம்.ஏ.றமீஸ்

1 comment:

  1. கட்டுரையின் கடைசிப் பகுதியை வாசிக்க வாசிக்க சிரிப்போ சிரிப்பா வருவுது. இப்பிடி அடிக்கடி நகைச்சுவையா எழுதினா இன்னும் வேடிக்கையாக இருக்கும பாருங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.