Header Ads



ஹக்கீமும், றிசாத்தும் பல்டி அடிப்பார்களா..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட சில சிறிய கட்சிகள் அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது கட்சிகளின் யோசனை மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள போதிலும் அரசாங்க தரப்பில், அவற்றுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் இது சம்பந்தமான பிரதான கட்சிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இந்த கட்சிகளிடம் இருந்து உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. பல்டி அடித்தடித்துத்தானே இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. பல்டி அடிக்கத்தெரிந்த,அதில் மிகுந்த அனுபவமுள்ளவர்கள் அதனை செய்வதில் தவறுகள் இல்லை என்று மக்கள் நினைக்கும் காலமெல்லாம் இவர்கள் தான் ..........! ?

    ReplyDelete

Powered by Blogger.