Header Ads



குற்றவாளிகளை கைதுசெய்யும் போது, ஜனாதிபதி தொலைபேசி அழைப்பு எடுக்கிறார்

நாட்டிற்கு பொது வேட்பாளர் ஒருவரே மீளவும் தேவை என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டிற்கு மீளவும் ஜனாதிபதி வேட்பாளராக பொது அபேட்சகர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கட்சி சார்பற்ற ஒருவரே இவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெற்றியீட்டிய பொது வேட்பாளர், கட்சி சார்பற்றவர் அல்லாத காரணத்தினால் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல்கள், மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் போது தற்போதைய ஜனாதிபதி தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்கின்றார். இதன் மூலம் அவரது நடுநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அரச நிர்வாகத்தின் உயர் பதவிகளில் தனது நெருங்கிய நண்பர்களை அமர்த்தியுள்ளார். இதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாத, வாகன அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத, கட்சி சார்பற்ற ஓர் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.

மறைந்த சோபித தேரரின் அணுகுமுறைக்கு அமைய இவ்வாறான வேட்பாளர் ஒருவர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.