Header Ads



சங்கடத்தில் கோத்தபாய - அம்பலப்படுத்திய ரஞ்சன்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் பசந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் பகிர்ந்த போராட்ட புகைப்படங்கள், பின்னர் நீக்கப்பட்டுள்ளமை சமூக ஊடகங்களின் பேசுபொருளாகி உள்ளன.  கூட்டு எதிரணியினர் நேற்று (05.09.18) நடத்திய போராட்ட புகைப்படங்களை கோத்தபாய ராஜபக்ஸவும், பசந்த யாப்பா அபேவர்தனவும், தமது சமூக வலைத் தளங்களில் பகிர்ந்திருந்திருந்தார்கள்.

இந்தப் பகிர்வு தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக “உங்களுக்கு தெரியும் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது என்று, இவ்வாறு நாமல் ராஜபக்ஸ தர்ப்பினர் பகிர்ந்த புகைப்படம் நுகேகொட பேரணியில் எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.” “இந்தப் போராட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டை விட உங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே எப்படி நுகேகொட பேரணி புறக்கோட்டையாக மாறியது என தெரியவில்லை” என கேலி செய்திருந்தார்.

இதனை அடுத்து இருவரின் சமூக வலைத்தள பகிர்வும் நீக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் ஊடக – சமூகஊடக மட்டங்களில் பேசப்படும் விடயமாகவும் கோத்தாபய ராஜபக்ஸவை சங்கடப்படுத்திய விடயமாகவும், குறிப்பாக அவரின் “கனவான்” பாத்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் விடயமாகவும் மாறி உள்ளன.

No comments

Powered by Blogger.