Header Ads



மகிந்த அணிக்கு ஆடம்பர ஹோட்டல்களில் அறைகள் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பணம், மதுபானம், உணவு

மக்கள் சக்தி கொழும்பு என்ற தலைப்பில் கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளும், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இன்று தங்க கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு காலிமுகத்திடலுக்கு எதிரில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆடம்பர அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹில்டன், ஷெங்க்ரீலா ஹோட்டல்களில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களான வர்த்தகர்களுக்காக முன்திவு செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

புலனாய்வு சேவைகளின் தகவல்களுக்கு அமைய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள ஆயிரத்து 100 பேருந்து கொழும்புக்கு வருவதாகவும், அவற்றில் ஏற்கனவே 523 பேருந்துகள் கொழும்பு நகருக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த பேருந்துகள் நுகேகொடை, நாராஹென்பிட்டி, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஷெங்க்ரீலா ஹோட்டலே ஆர்ப்பாட்ட பேரணிக்கு கூடிய ஆதரவை வழங்கியுள்ளதாகவும், அந்த ஹோட்டலின் பிரதான பணிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

2

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் உள்ள தோட்ட குடியிருப்பு வாசிகளில் ஒருவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம், சாப்பாட்டுப் பொதி மற்றும் ஒரு போத்தல் மதுபானம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களினால் இவ்வாறு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தோட்டக் குடியிருப்பு மக்களை பேரணிக்கு அழைத்து வரும் பொறுப்பு கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் செலவுகளை மதிப்பீடு செய்துள்ளதாக பேசப்படுகிறது.

No comments

Powered by Blogger.