Header Ads



வடகிழக்குக்கு அதிகாரத்தை வழங்கினாலே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்பது தவறானது

வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனக் குறிப்பிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என, அவர் இதன்போது எச்சரித்தார்.

நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக, மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே, அரசமைப்பின் 20ஆவது இருத்தம் ஆகும்.

இது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, "20ஆவது திருத்தம், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு, வெளிப்படையாகவே பாதிப்பானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு, எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது" என, அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்

1 comment:

  1. Yes Keep All Authority to Colombo and Down South.......

    ReplyDelete

Powered by Blogger.