September 26, 2018

"ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா, யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை"

ப‌த்தாயிர‌ம் உலமாக்க‌ள் குழ‌ம்பிபோய் இருநூறுக்கும் அதிக‌மான‌ ம‌துர‌சாக்க‌ள் க‌தி க‌ல‌ங்கி நிற்ப‌த‌ற்கு கார‌ண‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். 

இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்த‌ முய‌ற்சிக‌ள் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே இதில் எந்த‌த்திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ முடியாது என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ உல‌மா க‌ட்சி சொன்ன‌துட‌ன் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா ச‌பையையும் வேண்டிக்கொண்ட‌து.

2012ம் ஆண்டில் கொழும்பு வை எம் எம் ஏயில் ந‌டைபெற்ற‌ இது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்த‌ர‌ங்கில் ஷ‌ரீயாவுக்கு முர‌ணில்லாத‌ திருத்த‌துக்கு உலமா ச‌பை ஆத‌ரிக்கும் என‌ உல‌மா ச‌பை பிர‌திநிதிக‌ள் சொன்ன‌ போது ஷ‌ரீயாவுக்கு மாற்ற‌மாகாத‌ திருத்த‌த்துக்கு த‌யார் என்றால் ஷ‌ரீயாவுக்கு முர‌ணான‌ ச‌ட்ட‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் உள்ள‌து என்ப‌தை உல‌மா ச‌பை ஏற்ற‌தாக‌ ஆகும் என‌ நாம் அந்த‌ இட‌த்திலேயே சொன்ன‌ போது ப‌ல‌ரும் எம்மை க‌ண்டித்த‌ன‌ர். ஆனாலும் நாம் எச்ச‌ரித்த‌து போன்று இன்று ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா இது விட‌ய‌த்தில் மாட்டிக்கொண்டு தாமும் குழ‌ம்பி ஏனைய‌ உல‌மாக்க‌ளையும் குழ‌ப்பி விட்டுள்ள‌து.

உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடு போன்று எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌யார் இல்லை என‌ சொல்லியிருந்தால் இது விட‌ய‌ம் குப்பைத்தொட்டிக்கு போயிருக்கும். ஆனால் அர‌சையும் அரை நிர்வாண‌ பெண்ணுரிமை செய‌ற்பாட்டாள‌ர்க‌ளுக்கும் ஐரோப்பாவுக்கும் ப‌ய‌ந்து ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா சில‌ திருத்த‌ங்க‌ளுக்கு துணை போன‌து.
விவாக‌ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு ம‌தாஉ கொடுக்க‌லாம் என்றிருக்க‌ அவ‌ள‌து இத்தா முடிந்த‌ பின்பும் ம‌தாஉ கொடுப்ப‌த‌ற்கு ஷ‌ரீயாவில் இட‌மில்லை. அத்துட‌ன் முன்னாள் க‌ண‌வ‌னிட‌ம் ப‌ண‌ம் பெற்றுக்கொண்டே இன்னொரு திரும‌ண‌ம் செய்யாம‌ல் அவ‌ன் முன்பாக‌வே இன்னொருவ‌னை வைத்துக்கொண்டிருக்கும் பெண்க‌ள் இத‌ன் மூல‌ம் உருவாகுவார்க‌ள் என‌ நாம் எச்ச‌ரித்தோம்.

அத்துட‌ன் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌தை 16 என‌ கூட்டும் போது அந்த‌ வ‌ய‌துக்கு குறைந்த‌ பெண் காத‌ல் அல்ல‌து துஷ்பிரயோக‌ம் கார‌ண‌மாக‌ க‌ர்ப்ப‌முற்றால் அவ‌ள் 16 வ‌ய‌து வ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌துட‌ன் ஒன்றில் குழ‌ந்தையை கொல்ல‌ வேண்டும் அல்ல‌து அத‌னை அவ‌ளின் 16 வ‌ய‌து வ‌ரை ஹ‌ராமியாக‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும். ஆக‌வே திரும‌ண‌ வ‌ய‌தில் எந்த‌ மாற்ற‌மும் தேவையில்லை என்று சொன்னோம்.
அத்துட‌ன் இன்றைய‌ யுக‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் பிர‌ச்சினை என்ப‌து சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் அல்ல‌ மாறாக‌ 30 வ‌ய‌து தாண்டியும் திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ழியில்லாத‌ முதிர் க‌ன்னி விவ‌கார‌மே உள்ள‌தால் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌து ப‌ற்றி அல‌ட்ட‌த்தேவையில்லை என‌ கூறினோம். ஆனால் இவை எதையும் உல‌மா ச‌பை க‌ருத்தில் எடுக்காம‌ல் திருத்த‌ங்க‌ளுக்கு ஒப்புத‌ல் அளித்த‌து.

அதே போல் பெண்க‌ளை காதி ஜூரிக‌ளாக‌ நிய‌மிப்ப‌த‌ற்கும் ஷ‌ரீயாவுக்கு முர‌ணாக‌  ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா அனும‌திய‌ளித்துள்ள‌து மிக‌ப்பெரிய‌ த‌வ‌றாகும். ஒரு பெண் காதியாக‌ இருக்க‌ முடியும் என்றால் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் த‌லைவியாக‌ ஏன் ஒரு மௌல‌வியா பெண்ணை நிய‌மிக்க‌ முடியாது என‌ ம‌க்க‌ள் கேட்டால் அத‌ற்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா த‌யாரா என‌ கேட்கிறோம்.  உல‌மா ச‌பை பெண் காதியாருக்கு அனும‌திய‌ளித்துள்ள‌தால் நாளை ம‌ஸ்ஜிதுக‌ளின் இமாம்க‌ளாக‌, உல‌மா ச‌பை த‌லைவியாக‌ பெண்க‌ளை நிய‌மிக்க‌ வேண்டும் என‌ அரை நிர்வாண‌ பெண்ணுரிமை ஆத‌ர‌வாள‌ர்க‌ள் கோஷ‌ம் எழுப்புவார்க‌ள் என்ப‌தை இப்போதே உல‌மா க‌ட்சி எச்ச‌ரிக்கிற‌து.

ஆக‌வே த‌ற்போது ச‌லீம் ம‌ர்சூபின் அறிக்கை ஷாபி ம‌த்ஹ‌புக்கு முர‌ணாக‌ இருக்கிற‌து என‌ சொல்லும் உல‌மா ச‌பை த‌லைவ‌ர் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் அனைத்து அறிக்கைக‌ளையும் வாப‌ஸ் வாங்கி இவ‌ற்றின் குழுக்க‌ளில் இருந்தும் முற்றாக‌ வில‌கிக்கொள்வ‌த‌ன் மூல‌மே இத்த‌கைய‌ த‌வ‌றுக‌ளுக்கு  ப‌ரிகார‌மாக‌ இருக்கும். 

ஆக‌வே ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா என்ப‌து யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை. உல‌மா  ச‌பையின் அனும‌தியின்றி எத்த‌கைய‌ திருத்த‌த்தையும் அர‌சு செய்யாது.

ஆக‌வே முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ சிறு திருத்த‌த்துக்கும் உல‌மா ச‌பை துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி தாழ்மையாக‌ வேண்டுவ‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ குழுக்க‌ளில் இருந்து ப‌கிர‌ங்க‌மாக‌ வாப‌ஸ் பெறும்ப‌டியும் கேட்டுக்கொள்கிற‌து. 

11 கருத்துரைகள்:

Salaams,

Dear Brother Mubarak Abdul Majeed Moulavi,
Do you not realize that this ACJU Chairman Rizvi Moulavi is the greatest "MUNAAFIKK" in the Muslim Community and the Ulema in Sri Lanka?
The ACJU is also a gang of "MUNAAFIKKS". They should be opposed by the Sri Lanka Muslim Community totally and changes have to be brought in their management. The biggest culprit Rizvi Moulavi (who calls himself "As" Sheik") should be prosecuted for the number of financial frauds he has been doing as the President/Chairman of the ACJU, and for misappropriating "Halal Certificate" funds, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".

1951 ஆம் ஆண்டு எமது சமூக பெருந்தகைகளின் அயராத உழைப்பால் சரியாவிற்கு உட்பட்ட விதத்தில் உருவாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனியார் சட்டத்திற்கு இன்று ஏனிந்த நிலை? 1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகள் பெரிதும் பராட்டத்தக்கன.இக்காலத்தில் எமக்கிருக்கும் சவால்களுக்கு மத்தியில் இத்திருத்தம் அவசியமானதுதானா? ஹலால் மற்றும் அபாயா, மாடறுப்பு மற்றும் மதரசா அமைப்பு என ஒட்டுமொத்த இஸ்லாமிய செயற்பாடுகளும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ள இன்றய சூழலில் இது பாதுகாப்பானதா? இருப்பதை திருத்தப் போய் முற்றாக இழந்து விடுடமாட்டோமா? அன்றய அமைதியான சூழலில் தேவைப்படாத திருத்தம் இப்போதய ஆபத்தான சூழலில் தேவைதானா? சிந்தித்து செயற்படுவது சாலச்சிறந்து.

Question:
What is the ruling to say to someone he or she is a Munafiq?

Answer:

Islam is a complete religion and teaches us manners in all aspects of life.

As Muslims, we are not allowed to swear at/slander /backbite any human being; be they Muslim or non-Muslim.

Therefore, calling a Muslim ‘Munaafiq’ would be a very grave sin.

The Prophet Sallalahu Alayhi Wasallam has said

عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلي الله عليه و سلم قال: إذا قال الرجل لأخيه يا كافر فقد باء به أحدهما (رواه البخاري)
(Translation) Hazrat Abu Hurairah رَضِيَ اللهُ عَنْه has narrated that the Prophet صلي الله عليه و سلم said, “When a person says to his brothers ‘O Kaafir (disbeliever)’ then verily one of them has returned with it”

The meaning of this hadeeth is that if the person, who was called a Kaafir, is in reality a Kaafir, then so be it, but if the person is not a Kaafir then the label of Kurf will return on the person who said it.

http://islamqa.org/hanafi/tafseer-raheemi/52007

There is no need to call any one with bad words ...
It is not duty of human beings to pass judgment on others ..
Allah has made all arragments to do that on that day ..
Argue with logic...with wisdom .
Argue with some sense of humour .
After all; we talk about Islamic Law .divine law and it's reform ..
There are two aspects to divine law ..
One is immutable and other one is mutable ..
One is subject to change ..
One is not at all ..
It's well established in Islamic Law ..
Hunan transsaction are subjected to change ..
Read about it Islamic Law books .

I do not have time to tell all here ..
Or read books on legal and social changes in Islam .
Other aspect law is purely divine in nature such as pure divine command on prayers; rituals and theology ..
They do not change at all.
Customary habits are subjected to change ..
So; reform is must ...

Q: If a baby is born before the mother attains 16 yrs, does the baby need to be murdered as the author claims?? Can any Ulama clarify that pls??

நூர் நிஸாம்¸ நான் ஜம்இய்யத்துல் உலமாவோ அதனைச் சார்ந்தவனோ¸ அதற்காகப் பரிந்து பேசுபவனோ அல்ல. ஆனால் உங்கள் சிந்தனையில் கட்டுப்பாடு இல்லை. வார்த்தையில் பண்பு வெளிப்படவில்லை. மலக்குகளின் மூத்தவர் போல் முண்டியடித்துக்கொண்டு கண்டதையெல்லாம் கூறி உங்களின் விம்பத்தை வெளிப்படுத்துகின்றீர்கள்.

”அரை நிர்வாண பெண்ணுரிமை ஆதரவாளர்கள்” என்றசொல் வக்கிரமாகவும் சைபர் குற்றமாகக் கருதக்கூடியதுமாக உள்ளது. ”பெண்ணுரிமை ஆதரவாளர்கள்” என செம்மைப்படுத்தல் சாலச் சிறந்தது.

Dear Jeya
"Rights of Women" is fully given in Islam only....
So, the Half Nude....is absolutely correct to them, why ?
They are in Islam with muslims name but they are acting against to Islam and its law & rules given by almighty...
Who are they? Sure they came from enemy of Islam with muslims names..
So, please understand it

And this ACJU crooks were in coma past years with their regular dramatic movement...
Now they started to act in this subject too with name of "SAMARASAM".... and they concerned Math'habs and their thousands sheiks... They never care about Al-Quran & Saheeh hadeeths...

So, Muslim community should awake but when??

அன்புக்குரிய நூர் நிசாம் அவர்களே! எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட நபர் ஒரு “முனாபிக்” எனக் குறிப்பிடுகிறீர்கள். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக உங்களால் அடுக்க முடியுமா? குறிப்பிட்ட நபருடன் உங்களுக்குள்ள மனவெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் நற்செயல்கள்மீது அல்லது அவர்களின் துரித வளர்ச்சியின்மீது நீங்கள் கொண்டுள்ள எரிச்சல் மற்றும் பொறாமையின் காரணமாகவோ உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்துக்களிலிருந்து மிகத்தெளிவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதுவே பெரும்பாலான வாசகர்களின் கருத்துமாகும். புத்திரிகைகளுக்கு எழுதுகின்றபோதும் சரி; அதனை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளும்போதும் சரி அதற்குரிய விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படல் வேண்டும். புத்திரிகைகளும் தேவையான சந்தர்ப்பங்களில் செய்திகளின் தரம் அறிந்துதான் பிரசுரிக்க வேண்டும். இத்தவறான பிரசுரத்தினால் தாக்கப்பட்டவரின் குடும்பங்கள் அடையக்கூடிய மனக்கிலேசங்களுக்கு பத்திரிகைகள் மிகவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையின் ; Penal Code Chapter XIX – DEFAMATION - Section 480, 481, 482; Chapter XX – CRIMINAL INTIMIDATION, INSULT, AND ANNOYANCE – Section 484,. 485, 486, 487 ஆகிய பிரிவுகளின் (சட்டங்களின்) அடிப்படையில் இந்த பிரசுரத்தினால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவராயினும் ஒருவர் நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் மானபங்கப்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்குத் தொடர்கின்றபோது சம்பந்தப்பட்ட Noor Nizam மாத்திரமல்ல Jaffna Muslim மின் கௌவமும் குறிப்பாக வாசகர் மத்தியில் பாதிக்கப்படலாம். பிரசுரத்திற்கு வரக்கூடிய சகல விடயங்களையும் ஒன்றுக்கு இரண்டுமுறை பார்வையிட்டு தணிக்கை செய்து பிரசுரிப்பின் தேவையற்ற மனக்கிலேசங்கள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தாம் பின்பற்றும் மார்க்கத்தையே தான் அறியாமல் சீரழிக்கும் இருவர் ஒருவர் ஞானம் மற்றது இச்சீதேவி.

Post a Comment