Header Ads



மாட்டிறைச்சி கடைகளை மூடச்சொல்வதில், பெரும் சந்தேகம் நிலவுகிறது - நிலாம்

-பாறுக் ஷிஹான்-

மாட்டிறைச்சி கடைகளை மூட  மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார்.

நல்லூர் பிரதேச சபையில் இன்று (11)  மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாட்டிறைச்சியை முஸ்லீம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும் அறிவர். யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அநேகமான இறைச்சிக்கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லீம் மக்களாகும்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த கடைகளை மூட எத்தனிப்பது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது.யாழ்ப்பாண முஸ்லீம்கள் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறி தற்போது சுமூக வாழ்வை தொடர்கின்றனர்.ஆனால் இந்த நடவடிக்கை அவர்களது தொழிலுரிமையை பாதிக்கின்றது.அவர்களின் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கின்றது.

இன்று நல்லூர் பிரதேச சபையில் மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாண மாநகர சபை நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான மாட்டிறைச்சி கடைகளில் 20 கடைகளை முஸ்லீம்களே நடாத்தி வருகின்றனர்.

3 comments:

  1. please stop eating for 2 years
    then they force us to eat

    ReplyDelete
  2. கண்டியில் பௌத்தர்கள் மூடினார்கள் - no சந்தேகம், yes sir yes sir.
    நல்லூரில இந்துகள் மூடினார்கள் - சந்நேகம் வந்திடுச்சு. ஏனென்றால் இவர்கள் அடிக்க மாட்டார்கள்.

    நீங்களும் போய் உங்கட ஊரான காத்தான்குடியில மூடுங்கோவன்.

    ReplyDelete

Powered by Blogger.