Header Ads



குப்பை தொட்டியில் உட்கார்ந்து படம் வரைந்த Abdulrezzak Cuma க்கு பள்ளிக்கூடம் கிடைத்தது

துருக்கியில் அகதி சிறுமி ஒருவர் குப்பை தொட்டியில் உட்கார்ந்து படம் வரைந்து கொண்டிருந்ததையடுத்து, தற்போது அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.

சிரியாவைச் சேர்ந்தவர் Abdulrezzak Cuma. இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு துருக்கிக்கு சென்றுள்ளார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள Arnavutkoy பகுதியில் இவர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவரின் 11 வயது குழந்தையான Halime Cuma அங்கிருக்கும் குப்பை தொட்டிக்கு அருகே இருக்கும் குப்பை குவியலின் மீது அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

அதன் பின் அருகில் சென்று பார்த்த போது, அவர் ஒரு நோட்டில், வரைந்து கொண்டிருந்தார். அதற்கு கலர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தன் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த சிறுமி, பேப்பர் போன்றவைகளை சேகரித்து அப்பாவிற்கு உதவியாக இருந்து வருகிறார். இதனால் அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, Halime Cuma-வுக்கு உதவ அந்நாட்டு கல்வி அதிகாரிகள் முன் வந்துள்ளார்.

கடந்த புதன் கிழமை Halime Cuma அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அனைத்துவிதமான பாடப்புத்தகங்களும் கொடுக்கப்பட்டது. அவர் படிப்பிற்கு தேவையான செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் என்னிடம் நிறைய புத்தகங்கள் வரவுள்ளன, என் அப்பா தான் எனக்கு எல்லாம் என்று கூறியுள்ளார்.

அவரின் தந்தை Abdulrezzak Cuma கூறுகையில், நானும் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தான் ஆசைபடுவேன், ஆனால் அது என்னால் முடியாது. இன்று என்னுடைய மகள் Halime Cuma பள்ளிக்க் சென்றிருக்கிறாள். இதை சொல்ல வார்த்தையே இல்லை என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.