Header Ads



பிரிட்டிஷ் ஏர்வேசில் பயணித்த 3.8 லட்சம் விமான பயணிகளின் வங்கி விவரங்கள் திருட்டு - இங்கிலாந்தில் பரபரப்பு


பிரிட்டிஷ் ஏர்வேசில் பயணித்த 3.8 லட்சம் பயணிகளின் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடிய சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை எங்கள் விமான நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த 3.80 லட்சம் பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில், பயணம் மற்றும் பாஸ்போர்ட் குறித்த தகவல்களை ஹேக்கர்கள் திருடவில்லை. வங்கி கணக்கு மற்றும் தனிநபர் தகவல்கள் மட்டும்  திருடப்பட்டுள்ளன. இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவல் திருட்டு தொடர்பாக, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரித்து வருகின்றனர். 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இந்த விவகாரம் இங்கிலாந்து விமான பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையல்லஇங்கிலாந்தில் விமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்கள் அடிக்கடி புகுந்து, தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி வருவது இது முதல் முறையல்ல. விமானங்களின் புறப்பாடு, டிக்கெட் முன்பதிவு போன்றவற்றில் அவர்கள் மாற்றங்கள் செய்வதால்,் குழப்பம் ஏற்படுகிறது. கடந்த ஜூலையில் ஹேக்கர்கள் செய்த இதுபோன்ற செயலால், லண்டனில் இருந்து புறப்பட இருந்த பிரிட்டிஷ் ஏர்வேசின் பல விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இணையதளத்தில் செய்யப்பட்ட  கோளாறால்  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு 75,000 பயணிகள் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.