Header Ads



2025 இல் இலங்கை, செல்வந்தமாக நாடாக உருவாகும் - பிரதமர் ரணில்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள துரித அபிவிருத்தி செயற்பாடுகள் மூலம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை செல்வந்தமாக நாடாக உருவாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்து, கஷ்டங்களுக்கு மத்தியில் நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை செல்வந்த நாடாக உருவெடுக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை - செங்கலடி வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் மத்தள விமான நிலையத்தை மீண்டும் இயங்க செய்வதன் ஊடாக மொனராகலை, அம்பாறை, பதியத்தலாவ, மஹியங்கனை போன்ற பிரதேச துரிதமாக அபிவிருத்தியடையும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. அதற்குள் இலங்கையை தமிழ் அடிப்படைவாதிகள் துண்டாடிவிடுவார்கள்

    ReplyDelete
  2. Is Ranil s government capable doing this
    All projects almost failed . As example government discussing say take effort to regularisation of three wheelers from inception of their rule. But nothing has done as this service inconvenience public and many other problems . A simple example

    ReplyDelete
  3. May be what you said is possible only when politicians stop stealing from public money. How comes Politicians are owning several houses and many expensive vehicle in a short period of time?

    ReplyDelete
  4. தமிழில் எழுதும் நீங்களும் இதற்குள் அடக்கமா

    ReplyDelete
  5. செல்வந்த நாடாக மாற்றினது போதும்,கடனை அடைங்கடா முதல்ர...

    ReplyDelete

Powered by Blogger.