Header Ads



இந்த வருடத்தில் 1968 இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்


இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 1968 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது. 

அந்த முறைப்பாடுகளில் 1264 முறைப்பாடுகளை விசாரணைக்காக தெரிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார். 

அவற்று மோசடி முறைப்பாடுகள் 900, ஊழல் முறைப்பாடுகள் 254, தவறாக சொத்து சேர்த்த முறைப்பாடுகள் 63 மற்றும் 47 சுற்றிவளைப்புக்கள் இருப்பதாக அவர் கூறினார். 

இந்த அண்டின் ஆகஸ்ட் 15 வரையான காலத்தில் 28 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த சந்திரசிறி கூறினார். 

விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 29 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அதேவேளை குறித்த காலப்பகுதியில் 74 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்று 57 மேல் நீதிமன்றங்களிலும் 17 நீதவான் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

No comments

Powered by Blogger.