Header Ads



கொழும்பில் இப்படியும், ஒரு சம்பவம்

கொழும்பில் பதாதையுடன் நின்ற வெளிநாட்டவருக்கு உதவிய இலங்கை இளைஞர்கள் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கொழும்பு கங்காராமைக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் பதாதையுடன் நின்றுள்ளார்.

அந்த பதாதையில், எனது மடிக்கணனி காணாமல் போயுள்ளது, அதனை கண்டுபிடித்து கொடுத்தால் பணம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த இலங்கை இளைஞர்கள் சிலர் குறித்த சீன நாட்டவரை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, “முச்சக்கரவண்டியில் மடிக்கணனி மறந்து வைத்துவிட்டதாகவும், அதில் அலுவலக ஆவணங்கள் இருந்ததாகவும், கணனி தவறும் பட்சத்தில் தனது தொழில் உட்பட வாழ்க்கை கேள்விக்குறியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த தகவல்களை பார்த்த குறித்த முச்சக்கரவண்டி சாரதி, சீன நாட்டவருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் சீன நாட்டவரை ஒருவாறு தேடி கண்டுபிடித்த முச்சக்கர வண்டி சாரதி, அவரிடம் மடிக்கணனியை ஒப்படைத்துள்ளார்.

பதாதையில் எழுதப்பட்டது போன்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு 30000 ரூபாவை சீன நாட்டவர் சன்மானமாக வழங்கியுள்ளார்.

கணனியை கண்டுபிடிக்க உதவிய அனைத்து இலங்கை இளைஞர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.