August 06, 2018

சவூதி அரேபியாவுக்கு வந்த கோபம், கனடா தூதுவர் வெளியேற்றப்படுகிறார்

சவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

சவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து  கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமை போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.

ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அது மட்டுமின்றி சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியாவுக்கான கனடா தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள சவுதி தூதரை திரும்ப அழைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

6 கருத்துரைகள்:

Alhamdulillah...

A good slap on the face of the people who tries to destroy Islamic values inside Saudi Arabia using the title off freedom.

May Allah Bless Saudi King for his courage action against this kuffar culprits.

Ya Allah make our leader fear only you and help them Return our land toward your will.

Ya Allah make the people weak, those who try to destroy Islamic values of this land.

இஸ்ரேலின் திட்டங்கள் மிகவும் கச்சிதமாக நிறைவேறுகிறது... கனடாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சிறந்த உறவு இல்லை.. இதனால் இஸ்ரேல் முட்டாள் சவூதி இளவரசரனை வைத்து காய் நகர்ந்துகிறது..

It's good ..
Saudi needs to learn about diplomacy

பரஸ்பர உறவுகள், சகிப்புத்தன்மை,விட்டுக் கொடுப்புகள், பரஸ்பர புரிந்துணர்வு பற்றி இஸ்லாம் தோன்றிய இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக மார்தட்டிக் கொண்டு உலகில் வலம் வரும் ஒரு நாடு முற்றிலும் மார்க்கத்துக்கும் மத நம்பிக் கைக்கும் அப்பாற்பட்ட ஒரு நாட்டுடன் நடந்து கொள்ளும் விதம் உண்மையில் முஸ்லிம் என்ற வகையில் எமக்கு கவலையைும் ஆழ்ந்த அமைதியின்மையையும் தோற்றுவிக்கின்றது. இது போன்ற ராஐதந்திர நடவடிக்கைகளின் பின்விளைவு நிச்சியம் பாரதூரமானதாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம். அது நிச்சியம் சவுதிக்கு பாதகமாக இருந்தால்,அடுத்த பக்கம் இஸ்லாத்தையும் உலக மட்டத்தில் குறிப்பாக கனடா நாட்டில் வாழும் முஸ்லிம்களையும் பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அப்போது சவுதி அரேபியாவின் பங்கு என்ன? கையாலாகாத நிலைமை என்பது தௌிவு. குறிப்பாக பின்விளைவைப் பற்றி சற்றும் யோசிக்காமல் இந்த நாடுகள் நடந்து கொள்ளும் விதம் நிச்சியம் பெரும் கவலையைத் தோற்றுவிக்கின்றது.

Canada is liberal country and pro Muslim country but Saudi Arabia,UAE,Egypt are anti Muslim pro Israeli countries.Saudi did not react such way to India,Israel and Srilanka, When Muslims and it's masjids are under attack.

Canada was a very pro Israeli country during the Coservative government under Stephan Harper. Things changed after 2015 election. The new Liberal government under Justin Trudeau follows a balanced approach and support two state solution. They have very good relationship with Arab nations and have an Armoured tanks sales agreement with Saudi government against many pressures from various groups. Israelis want this relationship to end and this is the start. Stupid Arabs.

Post a Comment