பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகை தற்போது திருமணங்களை நடத்தும் இடமாக மாறியுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அலரி மாளிகை தானம் வழங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது என கடந்த காலங்களில் குற்றம் சுமத்தினர். எனினும் தற்போது அது திருமணம் நடத்தப்படும் இடமாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வரிச் செலுத்தும் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர,
பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பேருந்துகளுக்கு வழங்கும் தற்காலிக அனுமதிப் பத்திரங்கள், 4, 5, 6, 7 ஆகிய திகதிகளில் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக 4ஆம் மற்றும் 5ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது.
அந்த இரண்டு தினங்களில் கூடும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தை வேறு தினங்களுக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment