Header Ads



ஜேர்மனி அணியில், இனவெறி இல்லையா...?


ஜேர்மனி அணியின் கால்பந்து வீரர் டோனி குரூஸ், இனவெறி காரணமாக தான் ஓய்வு பெற்றதாக மெசுட் ஒஸில் கூறியது முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார்.

ஜேர்மனியின் கால்பந்து வீரர் மெசுட் ஒஸில், துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்டவர். ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜேர்மனி அணி மோசமாக விளையாடி வெளியேறியது கண்டனத்திற்கு உள்ளானது.

குறிப்பாக, இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியை ஒஸில் சந்தித்தார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றால் தன்னை ஜேர்மனியன் என்றும், தோற்றால் புலம்பெயர்ந்தவன் என்றும் கூறுகிறார்கள். ஜேர்மனி அணியில் இனவெறி உள்ளது என்று கூறி மெசுட் ஒஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஒஸில் கூறியது மிகவும் முட்டாள்தனமானது என சகவீரர் டோனி குரூஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘மெசுட் ஒஸில் ஜேர்மனி அணியில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றதை சரியாக கையாளவில்லை. ஒஸில் தான் நல்லவர் என்பதை அவர் வலியுறுத்த நினைத்தார். அவரது ஓய்வு அறிக்கையின் சில பகுதிகள் நல்லவை.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மிகவும் மோசமாக, மிகவும் முட்டாள்தனமான விகிதத்தில் அவரது ஓய்வு முடிவு அமைந்துவிட்டது. ஜேர்மனி அணியில் இனவெறி இல்லை என்பது அவருக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

மாறாக, நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பக்கம் வேறுபாட்டையும், ஒரு பக்கம் ஒருங்கிணைப்பையும் கொள்கையின் ஒரு புள்ளியில் முன் வைக்கிறோம். அணியில் உள்ள மற்ற வீரர்களைப் போல் மெசுட் அதற்கு எப்போதும் ஒரு நல்ல உதாரணம்.

என்னைப் பொறுத்தவரை, பொதுவெளியில் இதனை விவாதத்திற்கு கொண்டு வருவது இக்கட்டான சூழ்நிலையாகும்’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.