Header Ads



"மியன்மார் இராணுவத்திற்க்கு ஏற்பட்ட, நிலைமை இலங்கைக்கும் ஏற்படும்"

மியன்மாரின் உயர்மட்ட இராணுவ  தலைவர்களுக்கு எதிராக  இனப்படுகொலை விசாரனையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளதை போன்று இலங்கைக்கும்  ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்த அட்மிரல் சரத் வீரசேகர 

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு  எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை  நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என  தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"மியன்மாரின் உயர்மட்ட  இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எமது நாட்டிற்கும் எச்சரிக்கை  விடுப்பதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம் பெற்றதாகவும்,  இனப்படுகொலை இடம்பெற்றதாகவும்  பொய்யாக குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகளும் புலம் பெயர் அமைப்புக்களும் முன்வைத்தது.

அடுத்த மாதம் ஐ. நா சபையில் இடம் பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில்  இலங்கை பாரிய  எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க தயாராகவே உள்ளது. ஆனால்  உள்ளக அறிக்கையினை மேற்கொள்வதாக குறிப்பிட்ட அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான  நடவடிக்கைகளையும் இதுவரையில்  மேற்கொள்ளவில்லை.

முன்னாள் வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமரவீர  அரசாங்கதத்தின் எவ்வித அனுமதியும்  இன்றி ஐ.நா வின் கருத்துக்களுக்கு  சம்மதம் தெரிவித்தமையே பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக சில அரச சார்பற்ற அமைப்புக்களும், இயக்கங்களும் மாத்திரமே  குரல் கொடுத்தது. அரசாங்கம் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்பட்டது.

ஐ. நா. அரசாங்கத்திற்கு வழங்கிய காலவகாசம் நிறைவுறும் தருவாயிலே காணப்படுகின்றது.  இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகளிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பினர். சர்வதேச  விசாரனையினையே கோருகின்றனர். ஆகவே  இவ்விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாக செயற்பட்டால் மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது நாட்டு இராணுவத்தினருக்கு ஏற்படும்" என்றார்.

No comments

Powered by Blogger.