Header Ads



விஜயகலாவுக்கு எதிரான விசாரணை நிறைவு – சட்டமா அதிபருக்கு அறிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர  வேண்டும் என்று கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் போது விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டதுடன், காவல்துறை விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விசாரணைகளே முடிவுக்கு வந்திருப்பதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில், சிறப்பு காவல்துறைக் குழுவொன்று, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பலரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இந்த அம்மையார் ஒரு பெண் அதனால் தான் அவரை பழிவாங்குகிறார்கள் இவர் சொன்ன கருத்துகளுக்கும் விட எத்தனையோ சிங்கள இனவாதிகள் இதட்கு முன்பு சொல்லி இருக்கின்றார்கள் ஆனால் அதட்கு யாரும் நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.நாங்கள் இந்த அம்மையாருக்கு எப்போதும் நன்றிமறவாத மக்களாக இருக்க வேண்டும்,இந்த அம்மையார் யாழ்ப்பாணத்தில் நிறைய முஸ்லிம்களுக்கு உதவி செய்து இருக்கின்றார் அதை மறக்க முடியாது.

    ReplyDelete
  2. jaffna Muslim editor,pl dont publish any comments which can any person or communities. your not goin to loose anything . pl pl

    ReplyDelete
  3. @Naushad,
    This is not ISIS controlled area or area where tyrant like Saddam and Gadaffi rule.

    ReplyDelete

Powered by Blogger.