Header Ads



"சம்பள உயர்வுக்கு சகல அரசியல்வாதிகளும் விருப்பம், வெளியே பொய் சொல்கிறார்கள்"

பாராளுமன்ற ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சம்பள அதிகரிப்புக்கு பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் மனதளவில் உண்மையிலேயே விருப்பமுடன் காணப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் கூறினார்.

ஆளும் கட்சியிலும், எதிர்க் கட்சியிலும் உள்ளவர்கள் பகட்டுத்தனமாக உள்ளொன்று வைத்துக் கொண்டு வெளியில் சம்பள அதிகரிப்பை விரும்பாதவர்கள் போன்று ஊடகங்களின் முன்னால் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. #Maithripala Sirisena
    நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

    பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

    “நான் நேற்று பத்திரைகளில் பார்த்தேன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுவதாக குறுப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை செய்திகளில் வெளியாகி இருந்தன.

    கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து இந்த சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் வெளியிட்டு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகளில் குறிப்பிட்டிருந்ததனை நான் பார்த்தேன்.

    யார் கூறினாலும் 5 சதமேனும் சம்பளம் அதிகரிக்கப்படாது. அதற்கு நான் அனுமதி வழங்கப் போவதில்லை. அமைச்சரவை யோசனைகளுக்கு அனுமதியளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளம் 54258 ரூபாவிலிருந்து 120000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும்,

    அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65000 ரூபாவிலிருந்து 140000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும்

    பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பளம் 63500 ரூபாவிலிருந்து 135000 ரூபாவாக அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    எனினும் ஜனாதிபதியின் இன்றைய அறிவிப்பானது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    (Attached by Noor Nizam - Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.