Header Ads



சீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு, செல்பவர்களுக்கு கொடுமை

சீனாவிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி உள்ளது.

சில சீன பிராந்தியங்களில் இருந்து முஸ்லீம்கள் அரசு வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனங்களை அணிந்து ஹஜ் புனித யாத்திரை செய்து வருவதால், அதன் இஸ்லாமிய சிறுபான்மையினரின் மீதான சீனாவின் நெருக்கமான கண்காணிப்பு வெளிநாடுகளில் பரவி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 

'மெக்கா டிராக்கிங் சாதனம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டை, ஹஜ் யாத்திரைக்கு செல்லும் 11,500 முஸ்லிம்களில், மூன்றில் ஒரு பங்கினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஜிபிஎஸ் வசதி இருக்கும். கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. சீனாவில் 23 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு பல தடைகள் அங்கு உள்ளன. உதாரணமாக, முஸ்லிம் பாடசாலைகள், ஹபாயா பெண்கள் உடைகள் என்பன ஏன்கவே தடைசெய்யபட்டுள்ளன.

    நம்மட மகிந்த சீனாவின் pet தானே

    ReplyDelete

Powered by Blogger.