Header Ads



சீகிரியாவில் கண் வைக்கும் சீனா - தற்கொலை செய்வேன் என அரசியல்வாதி எச்சரிக்கை

சீகிரிய குன்றை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியம், சீனா நிறுவனம் ஒன்றுடன் இரகசியமான முறையில் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் தொல்லியல் மற்றும் மதிப்பீட்டு ஆய்வுகளின் பின்னர், சாதகமான பதில்கள் கிடைத்தால் மாத்திரமே கேபிள் கார் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரியசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் சீனாவை சேர்ந்த குழு ஒன்று வந்து ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டமை குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் சீகிரிய குன்றுக்கு செல்ல கேபிள் கார் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தம்புள்ளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் பிரியங்ஜன குமார கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை செயற்படுத்தினால், தான் சீகிரிய குன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

2 comments:

  1. நாட்டிலே ஒன்றும் நல்லது செய்ய முடியாது ஒரு குழு இருக்கின்றன என்ன சரி செய்து அதை தடுப்பதட்கு.சீகிரியாவுக்கு சென்றவர்களுக்கு தான் தெரியும் எப்படி அதாபு அங்கே படுறதென்று.

    ReplyDelete
  2. அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
    (அல்குர்ஆன் : 15:82)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.