Header Ads



இலங்கை வழக்காய்வுச் சட்டத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.


முழுமையான வழக்காய்வுச் சட்டச் சுருக்கத் தொகுப்பு (1820-2000)பாகம் 1, 2;- 22 வால்யூம்களின்  (Hussan’s Complete Digest of Case Studies Law of Sri-Lanka(1820-2000 Cotained in 22 Volumes) துணைப் பதிப்பின் இறுதிப் பகுதிகளான 3ஆம் 4ஆம் பகுதிகளின்(2000-2008) 25ஆம் 26ஆம் வால்யூம்களின் வெளியீட்டு விழா கண்டி 'ரோயல் மௌல், ரோயல் கோல்டன் கோர்ட்;' மண்டபத்தில் நிகழ்வுற்றது.

இச்சட்டத் தொகுப்பு நூலுக்கு இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதி  அரசர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. பிரியசாந்த டெப் அவர்கள் முகவுரை வழங்கியுள்ளமை குறிப்பிட்டது.  பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்;ளார்.

தந்துரையைச் சேர்ந்த காலஞ்சென்ற காசீம் லெப்பை சரீப்தீன் தம்பதிகளின் புதல்வரான இந்நூலாசிரியர் திரு. ஆ.ளு.ஆ. ஹூசைன்  L.L.M.(Colombo) கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டியில் பிரபல முதுநிலை சட்டத்தரணியாகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.

இவர் முன்னாள் கண்டி சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகவும், முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக வருகை தரு ச்ட்ட விரிவுரையாளராகவும், முன்னாள் கமநலசேவை விசாரணை சபை உறுப்பினராகவும்,முன்னாள் இ.போ.ச. மத்திய மாகாண சபை; பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றி இருப்பதோடு, இலங்கை சட்டக் கல்விச் சபையின் பரீட்சகராகவும், ஸ்ரீ லங்கா நெட் சட்ட இணையத்தள ஆசிரியர் பீட உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

இவ்விழாவின் பிரதம அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ திரு.ரத்னாயக்கா அவர்கள் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன், மத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதிகள்,கண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மேல்திக மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், கண்டி மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதிகள், மேலதிக மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதிகள், கண்டியில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுகின்ற நூற்றுக்கதிகதிகமான சட்டத்தரணிகளும், சட்டத்தரணி ஹூசைனின் குடும்ப உறுப்பினர்களும்,உறவினர் சிலரும் பங்குபற்றினர்.

சட்டத்தொகுப்பின் பிரதிகள் பிரதம அதிதி அவர்களுக்கும், கண்டி நீதிமன்ற நூலகத்துக்கும், கண்டி நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பபட்டன.

தகவல் கலாபூஷணம் எஸ.எல்.எம். பரீட் jp
         ஓய்வுநிலை ஆசிரியர் 

No comments

Powered by Blogger.