Header Ads



இலங்கையில் இராட்சத பீட்சா தயாரித்து சாதனை - 6.000 பேர் சாப்பிடலாம்

நுவரெலியாவில் ஆறாயிரம் பேர் உட்கொள்ளக்கூடிய இராட்சத ஸ்டாபரி பீட்சா ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

நுவரெலியாவில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த விசேட பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோபரி பழங்களைக் கொண்டு இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இது பிரதான உணவின் பின்னரான ஓர் டெசர்ட்டாக உண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பீட்சாவை தயாரிப்பதற்கு சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய ஸ்டாபரி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மூலப்பொருட்களுடன் இந்த பீட்சாவின் மொத்த எடை 1,400 கிலோ கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பீட்சாவை சுமார் ஆறாயிரம் பேர் உட்கொள்ள முடியும் என சமையற் கலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பீட்சாவை வெளியிடும் நிகழ்வில் நுவரெலியா மாநகரசiபியன் மேயர் சந்தனலால் கருணாலால் மற்றும் இலங்கை சுற்றுலாசபையின் தலைவர் காவன் ரட்நாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியாவில் பயிர்ச் செய்கை செய்யப்படும் ஸ்டாபரியை உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சா இன்று முதல் பத்து நாட்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என குறித்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஹோட்டல் பணியாளர்கள் இதற்கு முன்னதாக உருளைக் கிழங்கைக் கொண்டு உலகின் மிகப் பெரிய கேக் தயாரித்து சாதனை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சோத்துக்கு வழி இல்லாத நமக்கு ஏன் இந்தே தேவெல்லாத வெலே

    ReplyDelete

Powered by Blogger.