Header Ads



சீனாவிடமிருந்து பெற்ற பணத்தை கோத்தா + பஸில் என்ன செய்தனர் என அறியும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு

அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸவும், பஸில் ராஜபக்ஸவும் சீனாவிடமிருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்கள் என்று அறிந்துகொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தா மற்றும் பஸில் சீனாவிடமிருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்கள் என்று அறிந்துகொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. அதனாலேயே நியூயோர்க் டைம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க நியூயோர்க் டைம் வெளியிட்டுள்ள செய்தி தமக்கு சேறு பூசும் நடவடிக்கை என மஹிந்த கூறுகின்றார்.

அமெரிக்கா பொய்களை கூறும் நாடு என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

அதிவேக வீதி, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைத்த “சைனா ஹாபர்” மூலமே அந்த பணம் வந்தது.

அந்த பணத்தை பயன்படுத்தியவர்கள் கோத்தாவும், பஸிலுமே. இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர்கள்.

இதனால் அவர்கள் சீனாவின் பணத்தை என்ன செய்தார்கள் என்று அறிந்துகொள்ள அமெரிக்காவுக்கு உரிமையுண்டு. இதனாலேயே அமெரிக்க நியூயோர்க் டைம் அந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்றும் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. In this case, Yahapalanaya has the right to ask from Mahinda (Sri Lankan Citizen) what has happended to the money recieved from China? Did you ask???

    ReplyDelete

Powered by Blogger.