Header Ads



இலங்கை - தென் இந்திய முஸ்லிம் உறவு உயிர்ப்பிக்கப்படுமா...?

இலங்கைக்கும் - தமிழ் நாட்டுக்குமிடையிலான முஸ்லிம்களின் உறவு தொப்புள் கொடி உறவாகும். அது சமீபகாலத்தில் தொய்வடைந்திருக்கின்றது. அதனை உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமானதென்று இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.அபுபக்கர் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மகாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாற்றிய போதே சட்டமன்ற உறுப்பினர் இக்கருத்தினை வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் தாம் நெருக்கடிகளை எதிர்நோக்கிய போது தமிழக வாழ் முஸ்லிம்கள் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ, அதற்காக குரல் கொடுக்கவோ இல்லை என்ற மனக்கவலை இன்னும் இருந்து வருகிறது. இந்தக் கருத்தினை சட்டமன்ற உறுப்பினரதும் கவனத்துக்கும் பலர் கொண்டு வந்துள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை? என்ற குறைபாடு நிலவினாலும் நாம் இலங்கை முஸ்லிம்களை மறந்து விடவில்லை என்று குறிப்பிட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், இலங்கையில் தமிழ் - முஸ்லிம் உறவு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாடான இந்தியாவின் மிகப்பழமைவாய்ந்த அரசியல் கட்சியான இந்திய முஸ்லிம் லீக்கின் தலைமைத்துவம் இப்போது தமிழ்நாட்டிலே உள்ளது. முஸருல் மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் இப்போது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக இருக்கிறார் அல்லது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய முஸ்லிம் லீக் இலங்கை முஸ்லிம்களது விடயத்தில் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

அகில இந்திய முஸ்லிம் லீக் பல மாநிலங்களின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சியாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு கட்சி இந்திய அரசுக்கு பலத்த அழுத்தம் கொடுக்க முடியும். இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானது. இந்தியா முஸ்லிம்களதும் நலனைப் பேணும் தீர்வுக்கு வருவதற்கு உதவ வேண்டும். அதற்கான அழுத்தத்தை இந்திய முஸ்லிம் லீக்கினால் செய்ய முடியும். 

தென் இந்திய இலங்கை முஸ்லிம்களது உறவை வளர்ப்பதன் மூலமே தென் இந்திய முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது பிரச்சினை குறித்து கூடிய கரிசனையை ஏற்படுத்த முடியும். 

இந்த வகையில் தென் இந்திய அரசியல் தலைவரின் விஜயம் இருநாட்டு முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவினை மேலும் பலப்படுத்த நிச்சயம் உதவும். 

கடந்த ஐந்து நாட்களக அவர் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் ஊடக சமூகத்தவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் இலங்கை முஸ்லிம்களது பிரச்சினைகளை நன்கு அறிந்துகொள்வதற்கு சகலருக்கும் வாய்ப்பளித்திருக்கும். 
எனவே, தொய்வடைந்துள்ள இலங்கை முஸ்லிம்களுடனான உறவை மேம்படுத்த தமிழகத் தரப்பில் கூடுதலான அக்கறை காட்டப்பட வேண்டும்.

3 comments:

  1. @s..tna, தமிழ் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் அங்கு இஸ்லாமிய தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மதம், கலாச்சாரதை சரியாக பேனுவதைடன், இந்துகளுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    இங்கு இருக்கும் முஸ்லிம்களில் பெரும்பாண்மையோர் அடிப்படைவாதிகள். தமிழர்களோடும் சண்டை, சிங்களவர்களோடும் சண்டை.

    எனவே, தயவுசெய்து இந்திய இஸ்லாமிய தமிழர்களை குழப்பிவிடாதீர்கள். அவரகளாவது நிம்மதியாக வாழட்டுமே!


    ReplyDelete
  2. தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களினால் அவ்வப்போது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள், இலங்கையின் மூவினத்தினருக்கும் அசச்சுறுத்தலாக இருக்கிறது.

    தமிழன் என்று சொல்லி ஒட்டிக் கொண்டிருக்கும் கேடு கேட்ட கிறிஸ்தவப் பயங்கரவாதிகளினால்தான், இலங்கையில் 30 வருட காலம் பயங்கரவாதப் பிரச்சனை தொடர்ந்தது.

    கிறிஸ்தவ பயங்கரவாதிகளின் உந்துதல் இல்லாமல் இருந்திருந்தால், இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சனையை இந்தியா எப்போதோ சுமுகமாக முடித்திருக்கும்.

    இலங்கையில் மூவினங்கள் - முஸ்லீம், சிங்களம், தமிழ்.

    தமிழ் பேசும் முஸ்லிம்களும் சிங்களம் பேசும் முஸ்லிம்களும், இலங்கையில் - இனரீதியில் முஸ்லிம்கள்.



    ReplyDelete
  3. பயங்கரவாத கிறிஸ்தவ மதத்தில் இருந்து, பிரிந்து போய் PROTESTANTS என்ற இன்னொரு பயங்கரவாத கிறிஸ்தவ அமைப்பைத் தோற்றுவித்தவர்கள்தான், அடிப்படைவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அந்தப் பதம், தற்போது முஸ்லிம்களின்மேல் சூடி மிளகாய் அரைக்கப்படுகிறது - கிறிஸ்தவ, யூத திருட்டுக் கும்பல்களின் ஊடகத்துறை.

    SATANIC CHRISTIANITY IS A DIRTY CULT.

    JESUS NEVER KNEW WHAT IS SATANIC CHRISTIANITY AND SATANIC BIBLE.

    ReplyDelete

Powered by Blogger.