Header Ads



தமிழர் பிரச்சினை தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல்கொடுப்பது இல்லை

தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு இதுவரையில் தீர்வுகள் வழங்கப்படாவிட்டாலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நிலையுள்ளதாகவும், இந்த நிலைமையினை மகிந்த ராஜபக்ஸ குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்க முடியாது எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தன்னிடம் உள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்காவிட்டால் அது பெரும் சரிவினை ஏற்படுத்தும் நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் பலவீனங்களை காட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைப்போருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்காமல் தமது பலவீனங்களை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் மீது என்றும் இனவாதத்தினைக் கொண்டிருக்கவில்லையெனவும் அச்சமூகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளே தன்னை இனவாதியாக காட்டமுற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வரும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் குரல்கொடுப்பது இல்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதில் தமிழ் ஊடகங்கள் பாரிய பங்காற்றிய நிலையில் இன்று தமிழ் ஊடகத்துறையினை அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

4 comments:

  1. நீ வாக்கு வங்கிக்காக இனவாதத்தை கையிலெடுத்து சுற்றும் கேவலமான அரசியல்வாதி. உன்னை பற்றிய சான்றிதழ் எமக்கு தேவையில்லை முஸ்லிம் அரசியல்வாதிங்க தமிழனுக்கு குரல் கொடுக்க வேண்டுமென்றால் தமிழனின் வாக்குகளால் நீயெல்லாம் பாராளுமன்றம் சென்றது எதை பிடுங்க? முஸ்லிம்கள் மீது இனவாதத்தை பொழிந்து முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இப்படி பிச்சை கேட்க நீ வெட்க பட வேண்டும்

    ReplyDelete
  2. Hon.Look at you first.
    Do u work or Did u work to others.
    If u worked to others than ur a real person.

    ReplyDelete
  3. முஸ்லீம் மக்களின் பிரச்சினைய பார்க்கனுகள் இல்ல நீங்க வேற

    ReplyDelete
  4. தமிழ் முஸ்லிம் உறவுகளில் எடுத்ததுகெல்லாம் மாறி மாறி இன்வாதி முத்திரை குத்தினால் கிழகு மாகாணத்தில் ஒரு தமிழ் தலைவரோ முஸ்லிம் தலைவரோ மிஞ்ச மாட்டார்கள். தமிழ் முஸ்லிம் தரப்புகளில் உள்ள வியாழேந்திரன் போன்ற செய்ல்படும் தலைவர்கள் கூடிப் பேசாமல் கிழக்கில் விடிவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.