Header Ads



புலிகள் உயிர்பெற்றால் ஐ.தே.க. யே பொறுப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்தவர்.

வடக்கில் விடுதலைப்புலிகளின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறியதும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களுக்கு முன்புதான்.

ஆகவே விஜயகலாவின் இந்த கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

விஜயகலா மகேஸ்வரனின் கூற்று ஐக்கிய தேசியக் கட்சியின் கூற்றா? என்பது நாட்டு மக்களின் சந்தேகம் என்றும், அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புலிகளைப்பற்றி இன்று நேற்று பேசவில்லை. இதற்கு முன்னரும் பேசியுள்ளார்.

அதுவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரின் முன்பு பேசியுள்ளார். இது மிகவும் பாரதூரமான ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கில் முச்சக்கரவண்டியிலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் நாட்டிலும் இதேபோன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டு இருந்தன.

யாழ்ப்பாணத்தில் கோவில் உற்சவத்தில் தமிழீழ அலங்காரம். இதைப்போன்று தான் விஜயகலாவின் கருத்தும் என்று ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.