Header Ads



திமிங்கிலங்களை விட்டுவிட்டு, நெத்தலிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல

விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று காலை த.வி கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

விஜயகலா ஒருதாய். குறித்த காலப்பகுதியில் சிறுமியின் கொலைச் சம்பவம் அதிகம் பேசப்பட்டு வந்த சூழலில் அமைச்சர்கள் பலர் அங்கு சென்றுவந்தனர். இந்த நிலையில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாது விஜயகலா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது ஓர் தவறு கிடையாது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தனர். அதனால் குற்றம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்தும் தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணி கூறிய ஆதங்க கருத்தினை முன்வைத்துள்ளார்.

நாட்டை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடும் திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Wijayakala once mocked you that you are a government ‘Clerk’.

    ReplyDelete
  2. பாரம்பரிய கட்சியை சொந்த நலன்களுக்காக காட்டிக்கொடுத்த ஆனந்தசங்கரி இவரை போன்ற இன்னொருவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஆச்சரியம் அல்ல.

    ReplyDelete
  3. Do not worry. This will be the end of the story of UNP among Tamil people. Definitely Tamils will work against UNP in the coming presidential election. At-least Gota will wipe out the gangsters from north and east and bring peace.This government only talking and no action.

    ReplyDelete

Powered by Blogger.