July 15, 2018

இலங்கை முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே வாழ்கின்றனர்

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடிகளுக்கும் - பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழந்து வருவதாகவும், வல்லரசு நாடுகளின் சதித்திட்டத்தினாலேயே அந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68ஆவது மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் - நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர். இலங்கையில் மாத்திரமல்லாது  உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு இந்நிலை தான் உள்ளது. 

நாங்கள் சர்வதேச மாநாடுகளுக்கு செல்கின்ற போது மிக மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர முடிகின்றது. உலகத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் பிரச்சினை அதேபோன்று முஸ்லிம்கள் குறைவாக வாழ்கின்ற நாடுகளிலும் பிரச்சினை. 

முஸ்லிம்களை குழப்புவதற்கு, முஸ்லிம் நாடுகளை குழப்புவதற்கு சில வல்லரசு நாடுகள் திட்டமிட்டு செயற்படுகின்ற நிலையை காண்கின்றோம். 

பொருளாதார ரீதியில் பலமுள்ள சாம்ராஜ்யங்களாக வளர்ந்த பல முஸ்லிம் நாடுகள் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதை காண்கின்றோம். பல தலைவர்களை கொன்று குவித்துள்ளனர். 

இவ்வாறான சூழலில் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் - பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டியுள்ளது- என்றார். 

9 கருத்துரைகள்:

ஒரு பக்கம் சிங்கள பேரினவாதம் இன்னொரு பக்கம் தமிழ் பயங்கரவாதம்

@Gtx, இன்னொரு பக்கம் முஸ்லிம் வாஹ்ஹாபிசம், ஏமாற்றுதனம், கள்ளதனம்

Tamil terrorism is a parasite to this country.

Sinhalese should be rehabilitated in North and resettled.

ஒரு பக்கம் சிங்கலே சேனா மறுபக்கம் மறவன்புல சிவசேனா

WE HAVE CREATED THE PROBLEMS OURSELVES, ESPECIALLY THE MUSLIM POLITICIANS, ULEMA, ACJU AND THE MUNAAFIKK BUSINESSMEN. GOD ALLMIGHTY ALLAH SAYS - UNTILL WE CORRECT/CHANGE OURSELVES, EVEN GOD ALLMIGHTY ALLAHA CANNOT HELP US, Insha Allah.
THIS IS WHAT THE PRESENT DAY SINHALESE THINK ABOUT US - MUSLIMS.
Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM), Insha Allah.

1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
3. Our dealings are NOT CLEAN with other Communities.
4. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
4. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
5. We are SELF CENTERED and NOT COMMUNITY MINDED.
6. WE are OPPORTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhalese leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
7. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
8. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.

Noor Nizam - Convener - "The Muslim Voice"

At the same time Muslim politicians are putting Jalra for Government and enjoying their luxuries.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் இருக்கலாம்.
ஆனால் அதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல, முஸ்லிம்கள் மட்டுமே தான்.

உதாரணம்:- யுத்த காலத்திலும், அதற்கு பின்னர் ஜெனிவா காலத்திலும் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு பல பல வழிகளில் உதவினார்கள். வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அத்துடன் பொதுவாக சிங்களவர்கள் செய் நன்றி மறவாதவர்கள். அப்படியிருந்தும், 2012 க்கு பின்னர் நாடு முழுவதும் சுத்தி சுத்தி முஸ்லிகளுக்கு நல்ல அடி போட்டார்கள், இன்னும் போடுவார்கள், ஏன்? முஸ்லிம்கள் செய்யும் கள்ள வேலைகளும், அடிபடைவாதமும் தான். உலகம் பூராவும் இதே கதை தான்.

ANTONY HAVE YOU LOST YOUR SENSE

@Nebosh, Not yet, and I was 100% correct

Post a Comment